அடுத்த லெவலுக்கு முன்னேற அந்த 2 இந்திய வீரர்களின் அட்வைஸ் கேட்டேன்.. ஆப்கானிஸ்தான் வீரர் வெளிப்படை

gurbaz
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் கத்துக்குட்டியாக இருந்த அந்த அணி 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்தது உட்பட சமீப காலங்களாகவே நல்ல முன்னேற்றத்தை கண்டு எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து வருகிறது.

அந்த வரிசையில் அத்தொடரின் கடைசி போட்டியில் இந்தியாவுக்கு சவாலை கொடுத்து சமன் செய்த ஆப்கானிஸ்தான் முதல் சூப்பர் ஓவரிலும் வெற்றியை விட்டுக் கொடுக்கவில்லை. இருப்பினும் ஒரு வழியாக 2வது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இந்தியா கோப்பையை வென்றது. அந்தப் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி அசத்திய ரஹமனுல்லா குர்பாஸ் 50 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

ஆலோசனை கேட்பேன்:
சமீப காலங்களாகவே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக தேர்வாகி விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய ஜாம்பவான் வீரர்கள் எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரிடம் ஐபிஎல் தொடரின் போது நேரில் சந்தித்து நிறைய ஆலோசனைகளை பெற்றதாக ரஹமனுல்லா குர்பாஸ் கூறியுள்ளார்.

அது தம்முடைய கேரியரில் அடுத்த லெவலுக்கு முன்னேற உதவுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நான் எப்போதும் விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி ஆகியோரிடம் எப்படி என்னுடைய கிரிக்கெட்டை முன்னேற்றுவது என்பது பற்றி பேசுவேன். அதை வைத்து என்னுடைய மனதில் வைத்துள்ள நான் அவற்றில் முன்னேற வேலை செய்ய வேண்டும்”

- Advertisement -

“விராட் பாயிடம் என்னுடைய பயணம், எப்படி நான் வளர வேண்டும் மற்றும் எப்படி அடுத்த லெவலை எட்ட வேண்டும் என்பதை பற்றி பேசினேன். இந்தியாவுக்கு எதிரான தொடர் எங்களுக்கு நிறைய பாடங்களை கொடுத்தது. குறிப்பாக 2 முறை சூப்பர் ஓவர் நடைபெற்றது போன்ற போட்டிகள் நடக்க வேண்டும். நாங்கள் அந்த போட்டியில் மகிழ்ச்சியுடன் விளையாடி நிறைய பாடங்களையும் கற்றுக் கொண்டோம்”

இதையும் படிங்க: தோனி மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோரை பின்பற்றி ரிங்கு சிங் அந்த விஷயத்தை சாதிப்பார் – ரஹ்மனுல்லா குர்பாஸ் கருத்து

“அத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு எதிராக விளையாடியது எங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையையும் பாடத்தையும் கொடுத்தது. எனவே வருங்காலங்களில் இந்தியாவுக்கு எதிராக விளையாட எங்களுக்கு நிறைய தொடர்கள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார். இதைத் தொடர்ந்து குர்பாஸ் உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்த சில மாதங்களில் ஐபிஎல் தொடரில் இந்தியாவில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement