இனிமே அந்த 3 பேருக்கும் இந்திய அணியில் எப்போதுமே வாய்ப்பு கிடையாது – பி.சி.சி.ஐ அதிரடி நீக்கம்

IND
- Advertisement -

ஆண்டுதோறும் இந்திய அணி வீரர்களுக்கு அவர்களது தரத்தின் அடிப்படையில் வருடாந்திர ஒப்பந்தம் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் தீர்மானிக்கப்படும். அந்த வகையில் எதிர்வரும் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த கூட்டமானது டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வீரர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவர்களது வருடாந்திர ஒப்பந்தம் அறிவிக்கப்படும்.

Ishanth

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல் ராகுல், பும்ரா, விராட் கோலி போன்றோர் ஏ ப்ளஸ் பிரிவிலும், அடுத்த கட்ட வீரர்கள் ஏ பிரிவிலும், பின்னர் பி பிரிவு, சி பிரிவு என நான்கு வகையில் வீரர்களுக்கு சம்பளம் அளிக்கப்படும். அந்த வகையில் ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெறுவோருக்கு 7 கோடியும், ஏ பிரிவில் இடம்பெறுபவர்களுக்கு ஐந்து கோடியும் சம்பளம் வழங்கப்படும்.

அதேபோன்று பி பிரிவில் இடம்பெறுபவர்களுக்கு மூன்று கோடியும், சி பிரிவில் இடம்பெறுபவர்களுக்கு ஒரு கோடியும் வழங்கப்படும். அதன்படி எதிர்வரும் ஆண்டிற்கான வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த கூட்டத்திற்கு பிறகு எந்தெந்த வீரர்கள் எந்தெந்த குரூப்பில் இடம்பெறுவார்கள் என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகும்.

saha 1

இந்நிலையில் இந்த வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து மூன்று சீனியர் வீரர்களை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ கழட்டி விட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அஜிங்கியா ரஹானே மற்றும் விக்கெட் கீப்பர் விரிதிமான் சாஹா ஆகிய மூன்று வீரர்கள் தான் ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

குறிப்பிட்ட இந்த 3 சீனியர் வீரர்களுக்கும் இனி இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதனால் அவர்கள் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து கழட்டி விடப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : இங்கிலாந்து வெற்றியால் பாதகமா, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல இந்தியா செய்ய வேண்டியது என்ன?

மேலும் அண்மையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கு ஒப்பந்தத்தில் உயர்வு கிடைக்கும் என்றும் மற்ற வீரர்களுக்கு அவர்களின் தரத்திற்கு ஏற்றார் போல் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement