இங்கிலாந்து வெற்றியால் பாதகமா, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல இந்தியா செய்ய வேண்டியது என்ன?

IND
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இங்கிலாந்து 22 வருடங்கள் கழித்து அந்நாட்டில் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. அதிலும் தார் ரோடு போல இருந்த ராவல்பிண்டி மைதானத்திலும் சுழலுக்கு சாதகமாக இருந்த முல்தான் கிரிக்கெட் மைதானத்திலும் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தொடர்ந்து அதிரடியாகவே செயல்பட்டு வென்ற அந்த அணி அனைவரது பாராட்டுகளை பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த ஜூலை மாதம் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – பிரண்டன் மெக்கல்லம் வருகைக்குப் பின் அதிரடி அணுகுமுறையை பின்பற்றி நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகளை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கிய அந்த அணி தற்போது வெளிநாட்டிலும் தொடர் வெற்றிகளை குவிக்கத் துவங்கியுள்ளது.

அதனால் கடைசி 9 போட்டிகளில் 8 வெற்றிகளை சுவைத்துள்ள அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் ஒரு கட்டத்தில் 8வது இடத்தில் தவித்த நிலையில் தற்போது போராடி 5வது இடத்திற்கு வந்துள்ளது. அந்த அணியின் எழுச்சியால் இதுவரை வெறும் 16 புள்ளிகளை பெற்ற வங்கதேசமும் 28 புள்ளிகளை மட்டுமே பெற்ற நடப்புச் சாம்பியன் நியூசிலாந்தும் வரும் 2023ஆம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து ஏற்கனவே வெளியேறி விட்டன.

- Advertisement -

இந்தியா செய்ய வேண்டியது:
7வது இடத்தில் 28 புள்ளிகளுடன் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்ததால் வெளியேறுவது 99% உறுதியாகி விட்டது. மறுபுறம் ஏற்கனவே ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பில் இருந்த பாகிஸ்தான் இங்கிலாந்திடம் சந்தித்த அடுத்தடுத்த தோல்விகளால் 5வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் கடைசி போட்டியில் வென்றாலும் அந்த அணி ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இப்போதே அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. அதே சமயம் கீழிருந்து போராடி 5வது இடத்திற்கு வந்த இங்கிலாந்து ஃபைனலுக்கு செல்வதற்கு மெடிக்கல் மிராக்கள் நிகழ வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

ஏனெனில் முதல் 3 இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா (75%) தென்னாப்பிரிக்கா (60%) மற்றும் இலங்கை (53.3%) ஆகிய அணிகளுக்கு இங்கிலாந்தை விட அதிக வாய்ப்புள்ளது. மறுபுறம் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சென்று நியூசிலாந்திடம் கோப்பையை கோட்டை விட்ட இந்தியா தற்போது 52.08% புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. தற்சமயத்தில் அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வெல்ல வேண்டும்.

- Advertisement -

மேலும் வரும் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் இதே புள்ளி பட்டியலில் டாப்பராக திகழும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 4 – 0 என்ற கணக்கில் இந்தியா வெல்லும் பட்சத்தில் 70.37% புள்ளிகளுடன் எந்த சிரமமுமின்றி முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெறும். இதில் வங்கதேசத்துக்கு எதிராக நிச்சியமாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியா சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் எப்படியாவது வென்று விடும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் கடந்த 10 வருடங்களாக எந்த அணியிடமும் இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை.

இருப்பினும் ஆஸ்திரேலியா வலுவான அணி என்பதால் 1 டிரா அல்லது 1 தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் இந்தியாவின் ஃபைனல் கனவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதாவது 4 – 0 (4) அல்லது 3 – 0 (4) அல்லது 3 – 1 (4) என்ற கணக்கில் நிச்சயம் அந்த தொடரை இந்தியா வென்றாக வேண்டும். அதை தாண்டி 2 போட்டிகளில் டிராவை சந்தித்தாலோ அல்லது தோற்றாலோ அல்லது தொடரை இழந்தாலோ இந்தியா ஃபைனலுக்கு கனவு உடைந்து விடும்.

இதையும் படிங்க: அயர்லாந்து அணி கொடுத்த சலுகைகளை சஞ்சு சாம்சன் மறுக்க காரணம் என்ன தெரியுமா? – விவரம் இதோ

மேலும் இந்தியா தகுதி பெறும் போது நியூசிலாந்துக்கு எதிரான தன்னுடைய 2 போட்டிகள் கொண்ட கடைசி டெஸ்ட் தொடரில் இலங்கை வென்றாலும் தாமாக வெளியேறி விடும். அதுபோக அடுத்த வாரம் ஆஸ்திரேலியா – தென்னாபிரிக்க அணிகள் மோதும் தொடரில் தோற்கும் அணி ஃபைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பை குறைத்துக்கொள்ளும். அது இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement