அயர்லாந்து அணி கொடுத்த சலுகைகளை சஞ்சு சாம்சன் மறுக்க காரணம் என்ன தெரியுமா? – விவரம் இதோ

Sanju-Samson
- Advertisement -

இந்திய அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் இதுவரை 7 ஆண்டுகளில் வெகு சில போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதுமட்டும் இன்றி எப்பொழுது அவருக்கு இடம் கிடைத்தாலும் ஒரு போட்டியிலேயே அவர் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்படுவது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

Sanju Samson

- Advertisement -

ஏனெனில் பேட்டிங்கில் மிகச் சிறப்பான திறமையை வைத்திருக்கும் அவரை உலகமே பாராட்டும் வேளையில் அவருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக நிராகரிப்பை மட்டுமே பரிசாக வழங்கி வருகிறது. இந்நிலையில் அயர்லாந்து நாட்டின் சார்பாக அண்மையில் வெளியான அறிக்கையில் சஞ்சு சாம்சனுக்கு எங்கள் நாட்டில் குடியுரிமை வழங்குகிறோம் என்றும் அதுமட்டும் இன்றி வீடு, கார், பணம் என்று பல சலுகைகளோடு அவரை எங்களது அணியின் கேப்டனாகவும் விளையாட வைக்க நாங்கள் தயார் என்றும் சஞ்சு சாம்சனுக்கு சலுகைகளை அறிவித்தது.

மேலும் சஞ்சு சாம்சன் இதற்கு ஒத்துழைத்தால் நிச்சயம் அயர்லாந்தில் குடியேறுமாறும் அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஆனால் அதனை சஞ்சு சாம்சன் மறுத்துள்ளது தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படி ஒரு பெரிய சலுகையை மறுத்த சஞ்சு சாம்சன் அதற்கு பதிலாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது : எனக்காக இந்த அழைப்பினை நீங்கள் விடுத்ததற்கு நன்றி. அயர்லாந்து நிர்வாகம் சார்பில் எனக்கு இப்படி ஒரு அழைப்பு வந்தது பெருமையான விடயம் தான்.

Sanju Samson

ஆனாலும் நான் இந்திய அணிக்காக விளையாடவே காத்திருக்கிறேன். நிச்சயம் தேர்வாளர்கள் என்னை அழைக்கும் வரை நான் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் சூழ்நிலையை புரிந்து கொண்டு நான் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். என்னுடைய கனவே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும்தான்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியை தவிர்த்து வேறு ஒரு நாட்டுக்காகவும் நான் எப்போதும் விளையாட மாட்டேன். அயர்லாந்து நாடு எனக்கான சலுகைகளை வழங்கியதிலும், என்னை அழைத்ததிலும் எனக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. அதற்காக நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் ஆனாலும் உங்களது சலுகையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவிற்கு பதிலாக செலக்ட்டாகியுள்ள அபிமன்யு ஈஸ்வரன் யார்? – அவர் தேர்வாக என்ன காரணம்?

என்னுடைய கிரிக்கெட்டை ஆரம்பித்தது இந்திய அணிக்காக மட்டும் தான். நான் வேறு எந்த அணிக்காகவும் விளையாட விரும்பவில்லை. ஏன் அதுமட்டும் இன்றி வேறு ஒரு அணிக்காக விளையாடுவதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. கடைசி வரை இந்திய அணியின் அழைப்புக்காகவே நான் காத்திருப்பேன் என சஞ்சு சாம்சன் அவர்களது சலுகையை மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement