WTC Final : 13 ஆவது இந்திய வீரராக டெஸ்ட் கிரிக்கெட் மாபெரும் மைல்கல்லை எட்டிய ரஹானே – சாதனை விவரம் இதோ

Rahane
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வீரரான அஜின்க்யா ரஹானே கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 82 போட்டிகளில் விளையாடி 4931 ரன்களை குவித்துள்ளார். இதில் 12 சதக்களும் 25 சதங்களும் அடங்கும். (இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னர் வரை உள்ள தரவு) இந்நிலையில் கடந்த ஆண்டு மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ரகானே தொடர்ச்சியாக இந்திய அணிகள் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப்பட்டு வந்தார்.

Rahane 1

- Advertisement -

அதே வேளையில் அவரது இடத்தில் பேட்டிங் செய்த ஷ்ரேயாஸ் ஐயர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இனி அவரே ரஹானேவின் இடத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இந்திய அணி அறிவிக்கப்படும் முன்னர் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே வேளையில் இந்த இடைப்பட்ட காலத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே பெரிய அளவில் ரன்களை குவித்து அசத்தினார்.

அதோடு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியில் இடம் பிடித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி அவரது சிறப்பான பேட்டிங் பார்மை நிரூபித்த ரஹானே மீண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

Rahane

அதன்படி கடந்த ஜூன் 7-ம் தேதி துவங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் ரகானே இடம் பெற்று விளையாடி வருகிறார். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 469 ரன்களை குவிக்க அடுத்ததாக இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 296 ரன்களை குவித்தது.

- Advertisement -

இந்திய அணி ஒரு கட்டத்தில் மிகவும் மோசமான நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே 129 பந்துகளை சந்தித்து 11 மற்றும் ஒரு சிக்சர் என 89 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் அடித்த இந்த 89 ரன்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது மாபெரும் சாதனை ஒன்றினை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : WTC Final : 5 சதங்களை அடிச்ச அவர் விளையாடாதது நம்ப முடியல, இந்தியா தெரிஞ்சே தப்பு பண்ணிட்டாங்க – ஸ்டீவ் வாக் அதிருப்தி

அந்த வகையில் அவர் அடித்த இந்த 89 ரன்களின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 13-வது வீரராக ரஹானே 5000 ரன்களை தொட்டு சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஹானே இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டாலும் இன்றளவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தனது திறனை தொடர்ச்சியாக நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement