நல்லவேளை அவரு என்கூட இருந்தாரு. அசத்தலான ஆட்டத்திற்கு பிறகு – ஆட்டநாயகன் ரச்சின் ரவீந்திரா பேட்டி

Rachin-Ravindra
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் பிரம்மாண்டமான வெற்றியுடன் இந்த பயணத்தை அற்புதமாக ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் வடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணி சார்பாக ஜோ ரூட் 77 ரன்களையும், ஜாஸ் பட்லர் 43 ரன்களையும் குவித்தனர். பின்னர் 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சார்பாக டேவான் கான்வே 152 ரன்களையும், இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 123 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பின்னர் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இதுபோன்ற ஒரு நாள் அமைந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதோடு நல்ல ஃபீல்டிங் இருந்ததால் நாங்கள் இங்கிலாந்து அணியை 280 ரன்களில் சுருட்டினோம். நல்ல வேலையாக நான் பேட்டிங் செய்ய வரும்போது டேவான் கான்வே களத்தில் என்னுடன் இருந்தார். அவர் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை எனக்கு காண்பித்தார்.

இதையும் படிங்க : உ.கோ வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த கான்வே.. ரச்சினுடன் சேர்ந்து மொத்தம் 5 சரித்திர சாதனை

டேவான் கான்வே எனக்கு நல்ல நெருக்கம் உடையவர். கடந்த 4-5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் எப்படிப்பட்ட வீரராக வருவார் என்பது நமக்குத் தெரியும். அதையெல்லாம் தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர். இந்த போட்டியில் நான் விளையாடுவேன் என்று போட்டிக்கு முந்தைய நாள் தான் எனக்கு தெரிய வந்தது. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு சிறப்பான ஒன்று எனவும் ரச்சின் ரவீந்திரா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement