உ.கோ வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த கான்வே.. ரச்சினுடன் சேர்ந்து மொத்தம் 5 சரித்திர சாதனை

Devon Conway
- Advertisement -

இந்தியாவின் அகமதாபாத் நகரில் அக்டோபர் 5ஆம் தேதி துவங்கிய ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து தங்களது பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய நியூசிலாந்துக்கு எதிராக தடுமாற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து 50 ஓவர்களில் 282/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 283 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு முதல் பந்திலேயே வில் எங் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் அடுத்து வந்த ரச்சின் ரவீந்திராவுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் டேவோன் கான்வே அதிரடியாக விளையாடி முதல் ஆளாக சதமடித்து வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

கான்வேயின் சாதனைகள்:
நேரம் செல்ல செல்ல இங்கிலாந்து பவுலர்களை கடைசிவரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 273 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 36.2 ஓவரிலேயே நியூசிலாந்தை வெற்றி பெற வைத்தது. அதில் கான்வே 152* (121) ரன்களும் ரச்சின் ரவீந்திரா 123* (96) ரன்களும் எடுத்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

1. அந்த வகையில் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 151* ரன்கள் அடித்த டேவோன் கான்வே உலகக்கோப்பை வரலாற்றில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டியில் 150க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார். இதற்கு முன் 2015இல் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கையின் லகிரு திரிமண்ணே சேசிங் செய்கையில் 139* ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

2. மேலும் உலகக்கோப்பை வரலாற்றில் தங்களுடைய அறிமுக போட்டியில் அதிக வயதில் சதமடித்த நியூசிலாந்து வீரர் மற்றும் உலக அளவில் 2வது வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அந்த பட்டியல்:
1. ஜெரீமி பிரே (அயர்லாந்து) : 33 வருடம் 105 நாட்கள், ஜிம்பாபேவுக்கு எதிராக, 2007
2. டேவோன் கான்வே (நியூசிலாந்து) : 32 வருடம் 89 நாட்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2023*

3. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் அதிவேகமாக 1000 ரன்கள் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையும் படைத்தார். அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. டேவோன் கான்வே : 22*
2. கிளன் டர்னர்/டார்ல் மிட்சேல் : தலா 24

- Advertisement -

4. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் ஒரு போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வெளிநாட்டு ஜோடி என்ற மாபெரும் சாதனையும் அவர் படைத்தார். அந்த பட்டியல்:
1. டேவோன் கான்வே – ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) : 273*, இங்கிலாந்துக்கு எதிராக, 2023
2. ஆரோன் பின்ச் – டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) : இந்தியாவுக்கு எதிராக, 2020

இதையும் படிங்க: ENG vs NZ : கான்வே செய்த சாதனையை அடுத்த 15 நிமிடத்தில் 1 பந்தில் தூளாக்கிய ரச்சின்.. படைத்த 3 சாதனைகள்

5. அத்துடன் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தல் நியூசிலாந்து ஜோடி என்ற சாதனையும் அவர்கள் படைத்தனர். அந்த பட்டியல்:
1. டேவோன் கான்வே – ரச்சின் ரவீந்திரா : 273*, இங்கிலாந்துக்கு எதிராக, 2023
2. ஜெர்மோன் – ஹரிஷ் : 168, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1996

Advertisement