ENG vs NZ : கான்வே செய்த சாதனையை அடுத்த 15 நிமிடத்தில் 1 பந்தில் தூளாக்கிய ரச்சின்.. படைத்த 3 சாதனைகள்

Rachin Ravindra
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து தங்களுடைய பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவரில் 282/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 283 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு முதல் பந்திலேயே வில் எங் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் உங்களுக்கும் சேர்த்து நான் அடிக்கிறேன் என்பது போல் அடுத்ததாக வந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

சாதனை இளம் வீரர்:
குறிப்பாக இந்திய ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயர்களை கலவையாகக் கொண்ட அவர் மற்றொரு துவக்க வீரர் தேவோன் கான்வேயுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 270 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 36.2 ஓவரிலேயே நியூசிலாந்து எளிதாக வெற்றி பெற வைத்தார். அதில் டேவோன் கான்வே 84 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு உலகக் கோப்பையில் அதிவேகமாக சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனை படைத்தார்.

1. ஆனால் அடுத்த 15 நிமிடத்தில் 1 பந்து குறைவாக 83 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட ரச்சின் ரவீந்திரா உலக கோப்பையில் அதிவேகமாக சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை தன்வசமாக்கினார்.

- Advertisement -

2. அத்துடன் நாதன் அஸ்லேவின் சாதனையை தகர்த்து உலககோப்பை வரலாற்றில் தங்களுடைய அறிமுக போட்டியிலேயே மிகவும் இளம் வயதில் சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனை படைத்த அவர் உலக அளவில் 3வது வீரர் என்ற பெருமையும் பெற்றார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 22 வருடம் 16 நாட்கள் வங்கதேசத்துக்கு எதிராக, 2011
2. ஆன்ட்டி பிளவர் : 23 வருடம் 31 நாட்கள், இலங்கைக்கு எதிராக, 1992
3. ரச்சின் ரவீந்தரா : 23 வருடம் 321 நாட்கள் இங்கிலாந்துக்கு எதிராக, 2023*
4. நாதன் அஸ்லே : 24 வருடம் 152 நாட்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 1996

இதையும் படிங்க: CWC 2023 : இம்முறை வரலாறு மாறும்.. இந்தியாவை அவங்க ஓடவிட்டு தோற்கடிப்பது உறுதி.. மைக்கேல் அதர்டென் அதிரடி

3. அது போக உலகக்கோப்பை வரலாற்றில் சேசிங் செய்த போட்டியில் அதிக ரன்கள் (273) பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையை கான்வேயுடன் சேர்ந்து படைத்த அவர் இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டின் ஒரு போட்டியில் அதிக ரன்கள் (273) பார்ட்னர்ஷிப் அமைத்த வெளிநாட்டு ஜோடி என்ற சாதனையும் படைத்தார். மொத்தத்தில் இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய இந்த ஜோடியில் டேவோன் கான்வே 152* (121) ரன்களும் ரவீந்திரா 123* (96) ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement