CWC 2023 : இம்முறை வரலாறு மாறும்.. இந்தியாவை அவங்க ஓடவிட்டு தோற்கடிப்பது உறுதி.. மைக்கேல் அதர்டென் அதிரடி

Micheal Atherton
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தி சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

அதற்கு நிகராக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் போட்டியில் வென்று காலம் காலமாக வைத்திருக்கும் கௌரவத்தையும் இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் இருக்கிறது. மறுபுறம் 1992 முதல் இதுவரை சந்தித்த 7 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததால் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இம்முறை இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்றை மாற்ற வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

- Advertisement -

வரலாறு மாறும்:
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் 7 தொடர் தோல்விகளுக்கு பின் இந்தியாவை முதல் முறையாக பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டென் அதிரடியாக கணித்துள்ளார். குறிப்பாக காலம் காலமாக சந்தித்து வரும் தொடர் தோல்விகள் இம்முறை மாறும் என்று தாம் உணர்வதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“இது என்னுடைய தைரியமான கணிப்பாகும். 50 ஓவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் முதல் முறையாக இந்தியாவை இம்முறை தோற்கடிக்கும் என்று நான் சொல்வேன். அவர்கள் இத்தனை வருடங்களில் விளையாடியதில் 0 – 7 பின்தங்கியுள்ளார்கள். எனவே இம்முறை இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி இத்தொடரிலேயே மிகப்பெரியதாக இருக்கும். ஒருவேளை அவர்கள் செமி ஃபைனல் அல்லது ஃபைனலில் மோதுகிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்”

- Advertisement -

“அதில் நிச்சயமாக ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதில் ஏதோ ஒரு வகையில் பாகிஸ்தான் ஆச்சரியத்தை கொடுக்கும் வெற்றியை நோக்கி எகிறி குதிக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார். இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் ஷாஹீன் அப்ரிடி, பாபர் அசாம் உள்ளிட்ட முதன்மை வீரர்கள் அடங்கிய பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: ENG vs NZ : ஏமாற்றமான நாள்.. நாங்க நினச்சதை அவங்க செஞ்சுட்டாங்க.. தோல்விக்கு பின் கேப்டன் பட்லர் விரக்தி

மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வீரர்களை போல் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவமும் பாகிஸ்தான் வீரர்களுக்கு கிடையாது. எனவே சொந்த மண்ணில் கில்லியாக கருதப்படும் இந்தியா இம்முறையும் பாகிஸ்தானை வீழ்த்தும் என்பதே இந்திய ரசிகர்களின் நம்பிக்கையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement