ENG vs NZ : ஏமாற்றமான நாள்.. நாங்க நினச்சதை அவங்க செஞ்சுட்டாங்க.. தோல்விக்கு பின் கேப்டன் பட்லர் விரக்தி

Jos Buttler
- Advertisement -

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐசிசி 2023 உலகக்கோப்பை அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவின் அகமதாபாத் நகரில் துவங்கியது. அதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று இந்த உலகக் கோப்பையை வெற்றியுடன் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவரில் 282/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 77 ரன்களும் கேப்டன் ஜோஸ் பட்லர் 43 ரன்களும் எடுத்தனர். மறுபுறம் சரமாரியாக அடிக்கக்கூடிய இங்கிலாந்தை சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்திய நியூசிலாந்து கிரிக்கெட் அணி சார்பில் அதிகபட்சமாக மார்ட் ஹென்றி 3 விக்கெட்டுகளும் கிளன் பிலிப்ஸ் மற்றும் மிட்சேல் சாட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

- Advertisement -

பட்லர் ஏமாற்றம்:
அதை துரத்திய நியூசிலாந்துக்கு வில்லியம் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் 2வது விக்கெட்டுக்கு 270 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கிய டேவோன் கான்வே 152* (121) ரன்கள் எடுத்தார். அவருடன் ரச்சின் ரவீந்திரா 123* (96) ரன்களும் எடுத்ததால் 36.2 ஓவரிலேயே இலக்கை எட்டிய நியூசிலாந்து எளிதாக வென்றது.

இந்நிலையில் 330 ரன்கள் அடிக்கலாம் என்று நினைத்து தாங்கள் சரியாக அடிக்க தவறிய ஷாட்களை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பின்பற்றி தோல்வியை பரிசளித்து விட்டதாக கேப்டன் ஜோஸ் பட்லர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் ஒரு தோல்வியால் பின்வாங்க போவதில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “ஏமாற்றமான நாள். இங்கிலாந்து கொடுத்த இந்த வெற்றியை ஏற்றுக்கொள்வது கடினமாகும்”

- Advertisement -

“இருப்பினும் இந்த பெரிய தொடரில் இது வெறும் ஒரு தோல்வியாகும். இதற்கு முன் நாங்கள் இதே போல் தோற்கடிக்கப்பட்டு இதே போன்ற தோல்விகளை சந்தித்துள்ளோம். மேலும் நாங்கள் சராசரிக்கும் குறைவான ரன்களே எடுத்தோம். குறிப்பாக நாங்கள் 330 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்குடன் விளையாடினோம். அதற்கேற்றார் போல் சிறப்பாக இருந்த மைதானம் 2வது இன்னிங்ஸில் இன்னும் பேட்டிங்க்கு சாதகமாக மாறியது. ஆனால் நாங்கள் ஷாட்களை சரியாக அடிக்கவில்லை”

இதையும் படிங்க: NZ vs ENG : இங்கிலாந்து அணிக்கு எதிரான பிரமாண்டமான இந்த வெற்றிக்கு காரணம் இதுதான் – டாம் லேதம் பேட்டி

“நாங்கள் தொடர்ந்து எங்களது வழியில் விளையாட உள்ளோம். ஆனால் அதற்காக நாங்கள் மெதுவாகவும் சுமாரான ஷாட்களையும் அடித்து விளையாடக்கூடாது. அதே சமயம் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக கான்வே பெரிய ஷாட்களை அடிக்காமலேயே வேகமாக ரன்கள் சேர்த்தார். அவரைப் போலவே ரவீந்தராவும் விளையாடினார். அவர்களுடைய பார்ட்னர்ஷிப் எங்களை தோற்கடித்து விட்டது. குறிப்பாக இரவு நேரத்தில் பந்து பேட்டுக்கு அதிகமாக வழுக்கி கொண்டு நன்றாக வந்தது” என்று கூறினார்.

Advertisement