- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இலங்கை மாதிரி கிடையாது.. அந்த 2 அனுபவங்களை வெச்சு இந்தியாவில் வெற்றி பெறுவோம்.. ரச்சின் நம்பிக்கை

இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த அந்த அணி சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நொய்டாவில் விளையாடிய போட்டி மழையால் ரத்தானது. அதைத் தொடர்ந்து இலங்கையில் விளையாடிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து படுதோல்வியை சந்தித்தது.

எனவே அந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் நோக்கத்துடன் நியூசிலாந்து விளையாட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 2023 உலகக் கோப்பையில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதே போல கடந்த சில ஐபிஎல் தொடர்களில் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஐபிஎல் அனுபவம்:

எனவே அந்த அனுபவங்களை பயன்படுத்தி இத்தொடரில் நன்றாக விளையாடி இந்தியாவில் வெற்றிகளை பதிவு செய்ய முயற்சிப்பேன் என்று ரச்சின் ரவீந்தரா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மழையால் விளையாட முடியாதது ஏமாற்றத்தை கொடுத்தது. பெரும்பாலும் இந்திய துணைக்கண்டத்தில் 6 தொடர்ச்சியான போட்டிகளில் விளையாட நியூசிலாந்துக்கு வாய்ப்பு கிடைக்காது”

“எனவே இது சில வெற்றிகளை பதிவு செய்வதற்கான நல்ல வாய்ப்பாகும். அத்துடன் இது வீரராகவும் அணியாகவும் அனுபவங்களைக் கற்று முன்னேறுவதற்கான வாய்ப்பாகும். கண்டிப்பாக இந்தியாவும் இலங்கையும் வித்தியாசமான இடங்கள். ஆனால் சுழல் பந்துகளைப் பொறுத்த வரை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இடங்கள். இலங்கை தங்களுடைய சொந்த மண்ணில் தரமான அணி”

- Advertisement -

ஆர்வமான இந்திய ரசிகர்கள்:

“அதை அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் காண்பித்துள்ளனர். அங்கே நல்ல கற்ற பாடங்களை தற்போது இந்தியாவுக்கு கொண்டு வருவது முக்கியம். எங்களிடம் வில்லியம்சன், டாம் லாதம், மிட்சேல், கான்வே போன்ற தரமான வீரர்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அணுகுமுறைகள் உள்ளது. எனவே அவர்களை காப்பியடிக்காமல் உங்களுக்கென்று புதிய முறையை உருவாக்க வேண்டும்”

இதையும் படிங்க: காலம் மாறிடுச்சு.. இப்போ 1000 ரன்ஸ் அடிச்சாலும்.. அவங்க அசத்தலான 99% ஜெய்க்க முடியாது.. கெளதம் கம்பீர் பேட்டி

“ஐபிஎல் வித்தியாசமான ஃபார்மட் என்றாலும் இங்கே விளையாடியது நல்ல தன்னம்பிக்கையை கொடுத்தது. குறிப்பாக ரசிகர்களையும் எதிர்பார்ப்பையும் எப்படி கையாள்வது என்பது முக்கியம். ஏனெனில் இந்தியாவில் மக்கள் கிரிக்கெட்டின் மீது எந்தளவுக்கு ஆர்வத்தைக் கொண்டவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அப்படிப்பட்ட இந்தியாவில் மீண்டும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது ஸ்பெஷல். இங்கே ரசிகர்களின் ஆர்வம், எதிர்பார்ப்பு அற்புதமாக இருக்கும். அதற்கு மத்தியில் இந்தத் தொடரில் விளையாட ஆர்வத்துடன் உள்ளேன்” என்று கூறினார்.

- Advertisement -