இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற இந்தத் தொடரில் வெற்றி பெறும் நோக்கத்துடன் இந்தியா விளையாட உள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா 2 – 0 (2) என்ற கணக்கில் தொடரை வென்று நல்ல ஃபார்மில் இருக்கிறது.
எனவே இந்த தொடரிலும் நியூசிலாந்தை தோற்கடித்து வெல்லும் என்று ரசிகர்கள் இந்தியா எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் எப்போதுமே ரசிகர்களும் மக்களும் பேட்ஸ்மேன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவார்கள் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆனால் பேட்ஸ்மேன்கள் 1000 ரன்கள் அடித்தாலும் டெஸ்ட் போட்டியில் வெல்ல முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
பேட்ஸ்மேன்களை விட:
மேலும் பவுலர்கள் 20 விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்வதற்கு 99% வாய்ப்பு உள்ளதாக கம்பீர் கூறியுள்ளார். அதை செய்யக்கூடிய வீரர்கள் தங்களுடைய அணியில் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்திய சகாப்தம் முடிந்து விட்டது. இது பவுலர்கள் ராஜாங்கம் நடத்தும் சகாப்தமாகும். பேட்ஸ்மேன்கள் வெற்றிக்கான அடித்தளத்தை மட்டுமே உருவாக்க முடியும்”
“பேட்ஸ்மேன்களை மிகைப்படுத்தும் நம்முடைய அணுகுமுறை நிற்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேன் 1000 ரன்கள் அடித்தால் வெற்றி உறுதியாக கிடைக்காது. ஆனால் ஒரு பவுலர் 20 விக்கெட்டுகள் எடுத்தால் ஒரு டெஸ்ட் போட்டியை 99% உறுதியாக வெல்ல முடியும். டெஸ்ட் மட்டுமின்றி எந்த வகையான ஃபார்மட்டாக இருந்தாலும் பவுலர்கள் தான் உங்களுக்கு போட்டியையும் தொடரையும் வென்று கொடுப்பார்கள்”
பவுலர்கள் தான் முக்கியம்:
“எனவே இந்த சகாப்தத்தில் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பவுலர்களை நாங்கள் அதிகமாக பேசுகிறோம். எனவே அந்த பழைய மனநிலை மாறும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். அவர் கூறுவது போல 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா நல்ல ஸ்கோர் அடித்தும் தோல்வியை சந்திப்பதற்கான வாய்ப்பு உருவானது. ஆனால் அப்போது பும்ரா, அர்ஷ்தீப், பாண்டியா போன்ற பவுலர்கள் துல்லியமாக பந்து வீசினார்கள்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 500 ரன்ஸ்.. இந்தியாவை காப்பாற்ற 2 நாள்.. இதான் எங்களோட திட்டம்.. கோச் கம்பீர் பேட்டி
அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு பவுலர்கள் முக்கிய பங்காற்றினர் என்றே சொல்லலாம். இதைத்தொடர்ந்து இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு நகரில் துவங்குகிறது. அந்தப் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



