ENG vs NZ : அது எப்படிங்க 152 ரன்னை அடிச்சவரை விட்டுட்டு 123 ரன் அடிச்சவருக்கு – ஆட்டநாயகன் விருது குடுத்தாங்க?

Rachin-Ravindra
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2023-ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெறறு முடிந்தது. இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை சேர்த்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்களையும், ஜாஸ் பாட்லர் 43 ரன்களையும் அடித்து அசத்தினர். பின்னர் 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து அணியானது ஆரம்பத்திலேயே முதல் விக்கெட்டை இழந்தாலும் அதன் பின்னர் எந்த ஒரு விக்கெட்டையும் இழக்காமல் 36.2 ஓவர்களில் 283 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது 152 ரன்கள் அடித்த துவக்க வீரர் டேவான் கான்வேவிற்கு ஆட்டநாயகன் விருந்து வழங்கப்படாத வேளையில் 123 ரன்கள் மட்டுமே அளித்த ரச்சின் ரவீந்திராவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது அனைவரது மத்தியிலும் கேள்விகளை எழுப்பியது.

- Advertisement -

அந்த வகையில் அதற்கு உண்டான பதில் யாதெனில் : போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டாவது ஓவரின் முதலாவது பந்தில் 10 ரன்கள் இருந்த போது முதல் விக்கெட்டை நியூசிலாந்து அணி இழந்த வேளையில் அந்த இடத்தில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மூன்றாவது வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : CWC 2023 : இந்தியா – ஆஸி போட்டியில் வெல்லபோவது யார்? வரலாற்று புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன? – விரிவான அலசல்
இதன் காரணமாகவே அவர் 123 ரன்களை குவித்தாலும், ஆட்டநாயகன் விருது டேவான் கான்வேவிற்கு அளிக்கப்படமால் ரவீந்திராவிற்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement