CWC 2023 : ரச்சின் அந்த இந்திய லெஜெண்ட் மாதிரியே பேட்டிங் பண்றாரு.. வம்சவாளி வீரருக்கு கும்ப்ளே பாராட்டு

Rachin Ravindra 2
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக துவங்கியுள்ள ஐசிசி 2023 உலக கோப்பையில் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 283 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய நியூசிலாந்துக்கு 2வது விக்கெட்ருக்கு 273 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்த டேவோன் கான்வே 152* (121) ரன்களும் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 123* (96) ரன்களும் எடுத்து 37 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதில் 10 ஓவரில் 1 விக்கெட் எடுத்து 123* ரன்கள் குவித்து ஆல் ரவுண்டராக வெற்றியில் முக்கிய பங்காற்றிய ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

கும்ப்ளே பாராட்டு:
அத்துடன் உலகக்கோப்பை வரலாற்றில் தங்களுடைய அறிமுக போட்டியிலேயே இளம் வயதில் சதமடித்த நியூசிலாந்து வீரர் மற்றும் அதிவேகமாக (83 பந்துகள்) சதமடித்த நியூசிலாந்து வீரர் ஆகிய 2 சாதனைகளை படைத்தார். முன்னதாக பெங்களூரு நகரை பூர்வீகமாகக் கொண்ட அவருடைய தந்தை 1990களில் நியூசிலாந்து நாட்டுக்கு குடிபெயர்ந்தார். மேலும் அவருடைய தாய் மற்றும் தந்தையர் இந்திய ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடைய ரசிகர்களாக இருந்தனர்.

அதன் காரணமாக ராகுல் – சச்சின் ஆகிய பெயர்களை கலவையாக கொண்டு ரச்சின் ரவீந்தரா என்று அந்த ஜோடி தங்களுடைய மகனுக்கு பெயர் சூட்டியதை பெரும்பாலான ரசிகர்கள் அறிவார்கள். அந்த வகையில் நியூசிலாந்தில் வளர்ந்து அந்நாட்டுக்காக கடந்த 2021இல் முதல் முறையாக அறிமுகமான ரச்சின் தற்போது 3 வகையான கிரிக்கெட்டிலும் அடுத்த தலைமுறை வீரராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் ரச்சின் விளையாடுவதை பார்ப்பது இளம் வயதில் யுவராஜ் சிங் விளையாடியதை பார்த்தது போல் இருப்பதாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். பெங்களூருவை சேர்ந்த அவர் தங்கள் மாநில வம்சாவளி கிரிக்கெட் வீரரான ரச்சின் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய போது அவருடைய திறமைகளை நாம் பார்த்தோம்”

இதையும் படிங்க: மைதானம் காலின்னு யார் சொன்னா? இந்தியாவை கிண்டலடித்த பாக் ரசிகர்களுக்கு.. வாசிம் அக்ரம் பதிலடி

“ஆனால் அதை விட இப்போட்டியில் அவருடைய ஆட்டம் ஸ்பெஷலாக இருந்தது. குறிப்பாக தன்னுடைய உலகக்கோப்பை அறிமுக போட்டியில் நடப்பு சாம்பியனுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடினார். இது தான் ரச்சின் ரவீந்தரா பற்றிய என்னுடைய முதல் கருத்தாகும். அவர் இளம் வயது யுவராஜ் சிங் போல் இருக்கிறார். குறிப்பாக யுவராஜ் சிங் போல அவரின் பேட்டை சுழற்றும் விதம் மிகவும் நேர்த்தியாகவும் அற்புதமாகவும் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement