23 வயதிலேயே ஆஸிக்கு சவாலை கொடுத்து.. ஏபிடி, பாபரை முந்தி.. சச்சினின் சாதனையை சமன் செய்த ரச்சின் 

Rachin Ravindra
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 28ஆம் தேதி அழகான தரம்சாலாவில் நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்தை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 4வது வெற்றியை பதிவு செய்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அதிரடியாக விளையாடி 49.2 ஓவரில் 388 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் சதமடித்து 109, டேவிட் வார்னர் 81 ரன்கள் எடுத்ததால் 400 ரன்கள் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் செய்து அசத்திய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக க்ளன் பிலிப்ஸ் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 389 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 28, வில் எங் 32 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

ரச்சின் சாதனை:
ஆனாலும் 3வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய இந்திய வம்சாவளி வீரரான ரச்சின் ரவீந்திரா ஆஸ்திரேலிய பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 9 பவுண்டரி 5 சிக்சருடன் அபாரமான சதமடித்து 116 ரன்கள் குவித்தார். இருப்பினும் டார்ல் மிட்சேல் 54, டாம் லாதம் 21, கிளன் பிலிப்ஸ் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் கடைசியில் ஜிம்மி நீசம் அதிரடியாக 58 ரன்கள் எடுத்தும் நியூசிலாந்தை 383/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்களை சாய்த்தார்.

1. இருப்பினும் இப்போட்டியில் வெறும் 23 வயது மட்டுமே நிரம்பிய ரச்சின் ரவீந்திரா ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்ததை போலவே இதே தொடரில் இங்கிலாந்து எதிரான முதல் போட்டியில் சதமடித்து நியூசிலாந்தை வெற்றி பெற வைத்ததை மறக்க முடியாது. அப்படி 2 சதங்கள் அடித்துள்ள அவர் உலகக்கோப்பை வரலாற்றில் 23 வயதிலேயே 2 சதங்கள் அடித்த வீரர் சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த இருவரையும் தவிர்த்து உலகக் கோப்பையில் 11 வெவ்வேறு வீரர்கள் அதிகபட்சமாக தங்களுடைய 23 வயதிற்குள் தலா 1 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்கள்.

- Advertisement -

2. மேலும் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 400 ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற பாபர் அசாமின் சாதனையும் தகர்த்துள்ள ரச்சின் ரவீந்தரா சச்சினுக்கு அடுத்தபடியாக அசத்தி வருகிறார். அந்த பட்டியல்:
1. 22 வருடம் 313 நாட்கள் : சச்சின் டெண்டுல்கர் (1996 உலகக்கோப்பை)
2. 23 வருடம் 344 : ரச்சின் ரவீந்திரா (2023 உலகக்கோப்பை)*
3. 24 வருடம் 254 நாட்கள் : பாபர் அசாம் (2019 உலகக்கோப்பை)

இதையும் படிங்க: தோத்தது கஷ்டமா இல்ல.. ஆனா இப்படி வந்து தோத்தது தான் மனசு வலிக்குது – டாம் லேதம் அளித்த பேட்டி

3. இது போக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 23 வயதிலேயே அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற ஏபிடி சாதனையையும் உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்து வருகிறார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 523 (1996)
2. ரச்சின் ரவீந்திரா : 400 (2023)*
3. ஏபி டீ வில்லியர்ஸ் : 372 (2007)

Advertisement