தோத்தது கஷ்டமா இல்ல.. ஆனா இப்படி வந்து தோத்தது தான் மனசு வலிக்குது – டாம் லேதம் அளித்த பேட்டி

Tom Latham
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 28ஆம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற்ற 27வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.2 ஓவரில் 388 ரன்கள் விளாசி ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் சதமடித்து 109, டேவிட் வார்னர் 81, மேக்ஸ்வெல் 41 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் ட்ரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 389 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 28, வில் எங் 32 ரன்களில் அவுட்டாகி சச்சின் ரவீந்தரா சதமடித்து 116, டார்ல் மிட்சேல் 54 ரன்கள் விளாசி அசத்தினர். ஆனாலும் கேப்டன் டாம் லாதம் 21, கிளன் பிலிப்ஸ் 12 ரன்களில் அவுட்டானதால் கடைசி நேரத்தில் ஜிம்மி நீசம் அதிரடியாக 58 ரன்கள் எடுத்தும் 50 ஓவரில் 383/9 ரன்களை மட்டுமே எடுத்த நியூசிலாந்து போராடி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஏமாற்ற தோல்வி:
அதனால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3, கேப்டன் கமின்ஸ் 2, ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்த வகையில் வெற்றி பாதைக்கு திரும்பி ஆஸ்திரேலியா 4வது வெற்றியை பதிவு செய்த நிலையில் நியூசிலாந்து 2வது தோல்வியை பதிவு செய்தது.

இந்த நிலையில் 100 ஓவர்கள் முழுமையாக போராடி இவ்வளவு நெருங்கியும் வெற்றியை தொட முடியாமல் தோல்வியை சந்தித்தது மனதளவில் வலியை கொடுப்பதாக நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார். மேலும் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியா ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி தங்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“100 ஓவர்கள் முழுவதும் பரபரப்பாக நடந்த இப்போட்டி சிறப்பாக இருந்தது. அதில் வெற்றியை மிகவும் நெருங்கி தவற விட்டது வலிக்கிறது. இருப்பினும் இது நல்ல போட்டியாகும். ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே எங்களுக்கு பின்னோக்கி காலை வைக்கும் அளவுக்கு அழுத்தத்தை கொடுத்தனர். குறிப்பாக வார்னர் – ஹெட் விளையாடிய சமயங்களில் நாங்கள் தடுப்பாட்டத்தை விளையாடி விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்”

இதையும் படிங்க: நூலிழையில் உலக சாதனையை தவற விட்ட நியூசிலாந்து.. த்ரில்லான போட்டியில் ஆஸி வென்றது எப்படி?

“அந்த சமயத்தில் கிளன் கிளிப்ஸ் 10 ஓவர்களை முழுமையாக வீசி 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டார். பந்து வீச்சில் அவர் உழைத்ததற்கு தற்போது பரிசு கிடைத்துள்ளது. துவக்க வீரர்கள் எங்களுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்ததை போலவே ரச்சின் ரவீந்திரா சேசிங்கில் பார்ப்பதற்கு மிகச் சிறந்த இன்னிங்ஸ் விளையாடினார். வெற்றியை நெருங்க முடியாவிட்டாலும் ஒரு அணியாக எங்களுடைய வீரர்கள் அனைவரும் மகத்தான முயற்சியை போட்டதற்காக நான் பெருமைப்படுகிறேன். மேலும் தரம்சாலா விளையாடுவதற்கு மிகவும் சிறப்பான இடமாகும்” என்று கூறினார்.

Advertisement