நூலிழையில் உலக சாதனையை தவற விட்ட நியூசிலாந்து.. த்ரில்லான போட்டியில் ஆஸி வென்றது எப்படி?

AUS vs NZ 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு அழகான தரம்சாலா நகரில் நடைபெற்ற 27வது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் – டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடினார்கள்.

குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்த முதல் முறையாக களமிறங்கிய ஹெட் அதிரிடியாக விளையாடி முதலாவதாக அரை சதமும் கடந்த நிலையில் மறுபுறம் வார்னர் தம்முடைய பங்கிற்கு சிறப்பாக விளையாடினார். அந்த வகையில் 175 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான துவக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் டேவிட் வார்னரை 5 பவுண்டரி 6 சிக்சருடன் 71 (65) ரன்களில் அவுட்டாக்கிய கிளன் பிலிப்ஸ் மறுபுறம் சதமடித்த ஹெட்டையும் 10 பவுண்டரி 7 சிக்ஸருடன் 109 (67) ரன்களில் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

த்ரில் வெற்றி:
அவர்களைத் தொடர்ந்து மிட்சேல் மார்ஷ் 36, ஸ்டீவ் ஸ்மித் 18, மார்னஸ் லபுஸ்ஷேன் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 41 (24), ஜோஸ் இங்லிஷ் 38 (28), கேப்டன் பட் கமின்ஸ் 37 (14) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனார். அதனால் 400 ரன்கள் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவை 49.2 ஓவரில் 388 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ், ட்ரெண்ட் போட்டு தலா 3 விக்கெட்கள் சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து 389 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓபனிங் ஜோடியில் டேவோன் கான்வே 28, வில் எங் 32 ரன்களில் ஹேசல்வுட் வேகத்தில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் அடுத்ததாக ரச்சின் ரவீந்திராவுடன் ஜோடி சேர்ந்த டார்ல் மிட்சேல் 3வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 54 ரன்களில் ஆடம் ஜாம்பா சுழலில் சிக்கினார்.

- Advertisement -

அந்த நிலைமையில் ரச்சின் ரவீந்தரா 50 ரன்கள் கடந்த நிலையில் எதிர்ப்புறம் வந்த கேப்டன் டாம் லாதம் தடுமாற்றமாக விளையாடி 21 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த கிளன் பிலிப்ஸ் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதற்கடுத்த சில ஓவர்களில் தொடர்ந்து அசத்திய ரச்சின் ரவீந்தரா 9 பவுண்டரி 5 சிக்ஸருடன் சதமடித்து 116 (89) ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்ததால் நியூசிலாந்தின் வெற்றி கேள்விக்குறியானது.

அப்போது ஜிம்மி நீசம் அதிரடியாக விளையாடிகளில் எதிர்ப்புறம் மிட்சேல் சான்ட்னர் 17, மாட் ஹென்றி 9 ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நீசம் 50 ரன்கள் கடந்து போராடியதால் கடைசி ஓவரின் நியூசிலாந்துக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. மிட்சேல் ஸ்டார்க் வீசிய அதில் முதல் பந்தை எதிர்கொண்ட போல்ட் சிங்கிள் எடுத்த நிலையில் 2வது பந்தில் பவுண்டரி போகும் அளவுக்கு ஒய்ட் போட்டார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 2, 3, 4 ஆகிய பந்துகளில் தலா 2 ரன்களை எடுத்த நீசம் 5வது பந்தில் டபுள் எடுக்கும் முயற்சியில் 58 (39) ரன்களில் ரன் அவுட்டானார். அதனால் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது புதிதாக வந்த பெர்குசன் எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு பந்து வீசிய ஸ்டார்க் நியூசிலாந்தை 50 ஓவரில் 383/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெறுவதற்கு உதவினார்.

இதையும் படிங்க: அவரு அடிக்குற அடியை பாத்தா உலககோப்பை தொடர்நாயகன் விருது அவருக்குதான் – ஷேன் வாட்சன் கருத்து

குறிப்பாக லபுஸ்ஷேன் – இங்லிஷ் ஆகியோர் சேர்ந்து நீசமை ரன் அவுட்டாக்கியதால் வெறும் 5 ரன்களில் உலகக்கோப்பையில் அதிகபட்ச இலக்கை சேசிங் செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை நியூசிலாந்து தவறவிட்டது. அதனால் நியூசிலாந்து 2வது தோல்வியை பதிவு செய்த நிலையில் 4வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Advertisement