பிட்னெஸ் இல்லனா உ.கோ அணியில் இடமில்லை – 2014இல் இந்திய வீரர்களை திட்டிய தோனி, பின்னணியை பகிர்ந்த ஸ்ரீதர்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் குறிப்பாக வெள்ளைப்பந்து போட்டிகளில் பேட்டிங், பவுலிங் ஆகிய துறையை விட பீல்டிங் துறையில் அபாரமாக செயல்படுவது வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். ஏனெனில் அந்த துறையில் அபாரமான கேட்ச்களை பிடிப்பதும் பவுண்டரிகளை தடுப்பதும் இறுதியில் 1 ரன் வித்தியாசத்தில் கூட மிகப்பெரிய வெற்றியை பரிசாக கொடுக்கும். அதை நன்கு உணர்ந்த முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி இன்று இந்திய அணியில் பீல்டிங் துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்றே சொல்லலாம். குறிப்பாக 2011 உலக கோப்பைக்கு பின் வளமான இந்திய அணியை உருவாக்குவதற்கான வேலையை துவங்கிய அவர் சேவாக் போன்ற சில மந்தமாக ஃபீல்டிங் செய்யக்கூடிய வீரர்களை கழற்றி விட்டு ரெய்னா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா போன்ற இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்பை கொடுத்தார்.

Dhoni

- Advertisement -

அதற்காக கடுமையான விமர்சனங்களையும் வாங்கி கட்டிக் கொண்ட அவர் எதற்கும் சளைக்காமல் பீல்டிங் துறையில் கண்டிப்புடன் செயல்பட்டதை பின்னர் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி இருமடங்கு கண்டிப்புடன் பின்பற்றி உலக அரங்கில் இந்தியா பீல்டிங் துறைக்கு முன்னோடியாக திகழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் சுமாராக ஃபீல்டிங் செய்த இந்திய வீரர்களை தோனி கடுமையாக திட்டியதை பற்றி முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் நினைவு கூர்ந்துள்ளார்.

கோபமான தோனி:
அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தாலும் 2வது போட்டியில் போராடி வென்றது. அப்போட்டியில் முக்கிய நேரத்தில் 51 (40) ரன்கள் குவித்த தோனி இந்தியா 263/7 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக அமைந்து பின்னர் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். இருப்பினும் 264 ரன்களை கட்டுப்படுத்தும் போது இந்தியாவின் பீல்டிங் மோசமாக இருந்ததால் கோபமடைந்த அவர் போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

dhoni toss

“இப்போட்டியில் எங்களது அணியில் முக்கிய அம்சங்கள் தவறி போனது. நாங்கள் எங்கள் காலுறைகளை மேலே இழுக்க வேண்டும். நாங்கள் எங்கள் திறமைக்கு ஏற்றவாறு விளையாடவில்லை. இப்போட்டி எங்களுக்கு ஒரு முக்கியமான கண் திறக்கும் ஒன்றாக அமைந்தது. நாங்கள் வெற்றியை பெற்றாலும் தோற்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று கூறினார். அப்படி செய்தியாளர்களிடமே அதிருப்தியை வெளிப்படுத்திய தோனி உடைமாற்று அறைக்குச் சென்ற பின் இந்திய அணியினரை திட்டியதை பற்றி தனது சுயசரிதையில் ஆர் ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“இந்திய அணியில் என்னுடைய ஆரம்ப நாட்களில் அப்போதைய கேப்டன் தோனியின் உள்ளீடுகளுடன் அடுத்து நடைபெறும் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு நாங்கள் ஃபீல்டிங் துறையில் செயல்பட துவங்கினோம். அப்போது 2014 அக்டோபரில் பெரோசா கோட்லாவில் நாங்கள் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடி கச்சிதமாக வெற்றி பெற்றோம். ஆனால் எங்களுடைய ஃபீல்டிங் மோசமாக இருந்தது. அதனால் அதிருப்தியடைந்த எம்எஸ் தோனி பிட்னஸ் அம்சத்தில் சுமாராக இருந்த வீரர்கள் மீது கோபமடைந்தார்”

Sridhar

“அதன் காரணமாக உடைமாற்றும் அறையில் இந்திய அணியினரை துண்டு துண்டாக கிழித்தெறியும் வகையில் அவர் கோபமாக பேசினார். மேலும் பீல்டிங் மற்றும் பிட்னஸ் ஆகியவற்றில் குறிப்பிட்ட தரத்தை சந்திக்காத வீரர்களது பெயர் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் உலகக் கோப்பை அணியில் இடம் பெறாது என்பதை அவர் இந்திய வீரர்களிடம் தெளிவுபடுத்தினார். அந்த தருணம் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவர் உயர்தர ஃபீல்டிங் கலாச்சாரத்தை நிலை நிறுத்த விரும்பியது எனக்கு காட்டியது” என்று கூறினார்.

இதையும் படிங்க:ஆஸ்திரேலிய தொடரில் ராகுல் – கில் ஆகியோரில் சிறந்த தொடக்க வீரர் யார்? இர்பான் பதான் ரசிகர்கள் எதிர்பாராத கருத்து

முன்னதாக அந்த தொடரின் 3வது போட்டி விசாகப்பட்டினத்தில் வீசிய கடுமையான புயலால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 4வது போட்டியில் இந்தியா வென்று 2 – 1 எந்த கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் 4வது போட்டியின் முடிவில் தங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாததால் 5வது போட்டியில் பங்கேற்காமல் நாடு திரும்புவதாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ட்வயன் ப்ராவோ அதிரடியாக அறிவித்தார். அதனால் அந்த தொடரின் கடைசி போட்டி ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

Advertisement