டெஸ்டில் அசத்தியத்திற்காக சிஎஸ்கே அணியில் தோனி பிரமோஷன் கொடுத்தாரு.. 2011 பின்னணி பற்றி மனம் திறந்த அஸ்வின்

- Advertisement -

தரம்சாலா நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி துவங்குகிறது. அதில் நட்சத்திர இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார். இதுவரை 99 போட்டியில் விளையாடி 508* விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் கடந்த 10 வருடங்களில் இந்தியா பதிவு செய்த நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஆரம்பத்தில் தன்னுடைய கேரியரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக துவங்கிய அஸ்வின் நாளடைவில் தான் பவுலராக மாறினார். அந்த வகையில் இயற்கையாகவே தனக்குள் இருக்கும் பேட்டிங் டெக்னிக்கை பயன்படுத்தி இதுவரை 14 அரை சதங்கள் மற்றும் 5 சதங்கள் அடித்துள்ள அவர் 3309 ரன்களும் அடித்து இந்திய அணியின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

தோனி கொடுத்த பிரமோஷன்:
சொல்லப்போனால் அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் ஆரம்ப காலங்களில் தமக்கு ஓரளவு பேட்டிங் தெரியும் என்பது பற்றி அப்போதைய கேப்டன் தோனி அறியாமல் இருந்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். அதனால் 2011இல் முதல் டெஸ்ட் சதமடித்த பின்பே தம்முடைய பேட்டிங் திறமையை தோனி தெரிந்து கொண்டதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக இந்திய அணியில் சற்று மேலே பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு கொடுத்த தோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சில போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்குவதற்கான வாய்ப்பையும் கொடுத்ததாக அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு ஓரளவு பேட்டிங் தெரியும் என்பது எம்.எஸ். தோனிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை”

- Advertisement -

“ஏனெனில் ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் எனக்கு பேட்டிங் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அது சாதாரணமாக 9, 8வது இடமாக இருக்கும். அதே சமயம் பந்தை அடிப்பது எனக்கு இயல்பாக வரவில்லை. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதல் முறையாக சதமடித்த போது “உனக்கு பேட்டிங் வரும் என்பது எனக்குத் தெரியாது” என்று தோனி என்னிடம் சொன்னார். அதன் பின் பேட்டிங் வரிசையில் மேலே வாய்ப்பு கொடுத்த அவர் சிஎஸ்கே அணிக்காக சில போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பையும் கொடுத்தார்”

இதையும் படிங்க: ஹாஸ்பிட்டலில் அம்மா கண் விழிச்சதும் சொன்ன வார்த்தை அது தான்.. 3வது டெஸ்டில் பாதியிலேயே வெளியேறியது பற்றி அஸ்வின்

“ஏனெனில் நான் ஒரு நல்ல டச் பிளேயர் என்று அவர் உணர்ந்தார்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து நடைபெறும் ஐந்தாவது போட்டியில் வென்று 4 – 1 என்ற கணக்கில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. மறுபுறம் தொடரை இழந்த இங்கிலாந்து கடைசிப் போட்டியில் வென்று ஆறுதல் வெற்றி பெற போராட உள்ளது.

Advertisement