600 ரன்ஸ் அடிப்போம்ன்னு ஆண்டர்சன் சொன்னப்போவே புரிஞ்சு போச்சு.. ரூட் ஒத்துக்கிட்டது ஆர்ச்சர்யம்.. பஸ்பால் பற்றி அஸ்வின்

Ashwin 55
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதன் வாயிலாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா ஐசிசி தரவரிசையிலும் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது. அத்துடன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை ஒரு தொடரில் தோற்கடித்த முதல் அணியாகவும் இந்தியா சாதனை படைத்தது.

முன்னதாக இந்த தொடரில் டி20 போல அதிரடியாக பேட்டிங் செய்து இந்தியாவை தோற்கடிப்போம் என்று சொன்ன இங்கிலாந்து முதல் போட்டியில் வென்றது. ஆனால் அதற்கடுத்த 4 போட்டிகளிலும் அதிரடியாக விளையாட முயற்சித்த அந்த அணி சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் விளையாடாமல் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அஸ்வின் கருத்து:
குறிப்பாக விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 399 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அப்போது இந்தியா 500 – 600 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தாலும் அதை சேசிங் செய்து இங்கிலாந்து வெல்லும் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் சவால் விடுத்தார். ஆனால் அடுத்த நாள் சொதப்பிய இங்கிலாந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

இந்நிலையில் 600 ரன்களை அடிப்போம் என்ற ஆண்டர்சன் சொன்னதுமே இங்கிலாந்து அணியினர் நிதானமாக விளையாடுவதற்கு தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். மேலும் பஸ்பால் என்பது பாதுகாப்பற்ற ஆட்டம் என்று தெரிவிக்கும் அஸ்வின் அதை விளையாடுவதற்கு ஜோ ரூட் சம்மதித்தது தமக்கு ஆச்சரியத்தை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதல் போட்டியில் வென்ற பின் ஜேம்ஸ் ஆண்டர்சன் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு சென்றார். அவர்கள் முதல் போட்டியில் வென்றதற்கு மதிப்பு கொடுக்கிறோம். ஆனால் இரண்டாவது போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் 500 அல்லது 600 ரன்கள் இலக்காக இருந்தாலும் அதை 60 ஓவர்களில் நாங்கள் அடித்து முடிப்போம் என்று அவர் சொன்னார். அது இங்கிலாந்தின் நேர்மறையான மனநிலை மற்றும் அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஆனாலும் அது சற்று அதிகப்படியானதாக இருந்ததாக நான் உணர்ந்தேன்”

இதையும் படிங்க: விமர்சித்ததற்காக ஜாம்பவான் என்று பார்க்காமல் ஷ் சொன்ன ஷாஹீன் அப்ரிடி.. பதிலடி கொடுத்த வாசிம் அக்ரம்

“மேலும் முதல் போட்டி முடிந்ததும் பஸ்பால் என்பது ஆக்ரோஷமான ஆட்டம் கிடையாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அது பாதுகாப்பற்ற கிரிக்கெட். அதைப் பின்பற்றியதால் அவர்கள் தடுப்பாட்ட ஷாட்டை அடிக்கவே இல்லை. அவர்கள் தடுப்பாட்டம் விளையாட வேண்டும் என்பதிலிருந்து வெளியே வந்து விட்டனர். அதற்கு ஜோ ரூட் சம்மதம் தெரிவித்தது எனக்கு ஆச்சரியமாகும். ஏனெனில் உலக கிரிக்கெட்டில் சுழலுக்கு எதிராக தடுப்பாட்டம் விளையாடுவதில் ஜோ ரூட் நம்பர் ஒன் வீரர். ஆனால் அவரும் இங்கிலாந்தின் அணுகு முறையை கொண்டு வந்தார்” என்று கூறினார்.

Advertisement