2018 சம்பவம் 7 விக்கெட்ஸ்.. வெற்றியை இழுத்துக் கொண்டு வந்தேன்.. கேரியரின் சிறந்த பவுலிங் பற்றி பேசிய அஸ்வின்

Ashwin vs Root 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5வது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் நட்சத்திர இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை 99 போட்டிகளில் 508* விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

அந்த வகையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நிறைய வெற்றிகளில் பங்காற்றி வரும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 500 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். மேலும் பேட்டிங்கிலும் 5 சதங்களும் அடித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சமீபத்தில் படைத்தார்.

- Advertisement -

சிறந்த பவுலிங்:
இந்நிலையில் தம்முடைய கேரியரில் எத்தனையோ போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியிருந்தாலும் 2018 பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்திய பவுலிங் தான் சிறந்தது என்று அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி ஐந்தாவது போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் போட்டிகளில் வெல்வதே எப்போதும் உயர்ந்து நிற்கும்”

“இருப்பினும் 2018 பர்மிங்காம் போட்டியில் என்னுடைய கேரியரில் ஒரு சிறப்பான பந்து வீச்சை நான் வீசினேன். அந்தப் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் நான் பந்து வீசினேன். குறிப்பாக மூன்றாவது நாளின் காலையில் பந்து வீசிய நான் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்தேன். அந்த வகையில் மொத்தம் அந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் எடுத்த நான் கிட்டத்தட்ட இந்தியாவை வெற்றியின் பக்கம் இழுத்துக் கொண்டு வந்ததாக நினைத்தேன். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது” என்று கூறினார்.

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் நடந்த அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் எடுத்து முழு மூச்சுடன் வெற்றிக்கு போராடினார். மறுபுறம் அப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி தனி ஒருவனாக 149 ரன்கள் அடித்து போராடினார்.

இதையும் படிங்க: கவாஸ்கருக்கு அப்றம் அந்த தமிழக வீரர் தான்.. சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்னு சாஸ்திரி சொன்னாரு.. பரத் அருண்

இருப்பினும் கடைசியில் வெறும் 194 ரன்களை சேசிங் செய்த போது மீண்டும் விராட் கோலி 51 ரன்கள் எடுத்து போராடியும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறினர். அதன் காரணமாக 31 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் இந்தியா பரிதாபமாக தோற்றது. ஆனாலும் சவாலான இங்கிலாந்த மண்ணில் அப்போட்டியில் எடுத்த 7 விக்கெட்டுகள் தன்னுடைய கேரியரில் சிறந்த பந்து வீச்சாக இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement