கவாஸ்கருக்கு அப்றம் அந்த தமிழக வீரர் தான்.. சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்னு சாஸ்திரி சொன்னாரு.. பரத் அருண்

Bharat Arun
- Advertisement -

நூற்றாண்டு பழமை வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த துவக்க வீரர்களாக சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் கருதப்படுகிறார்கள். குறிப்பாக கொஞ்சம் அசந்தால் மண்டையை பதம் பார்க்கும் வெறித்தனமான வேகத்தில் பந்து வீசக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் ராஜாங்கம் நடத்திய காலத்தில் அறிமுகமாகி ஹெல்மெட் போடாமலேயே 10000 ரன்கள் அடித்து சாதனை படைத்த சுனில் கவாஸ்கர் மகத்தான துவக்க வீரராக போற்றப்படுகிறார்.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் முரளி விஜய் ஜாம்பவான் சுனில் கவாஸ்கருக்கு பின் சிறந்த துவக்க வீரர் என்று ரவி சாஸ்திரி அடிக்கடி பாராட்டியதை முன்னாள் இந்திய வீரர் மற்றும் பயிற்சியாளர் பரத் அருண் பகிர்ந்துள்ளார். மேலும் கல்லூரி போட்டியில் முதல் முறையாக பார்த்து முரளி விஜயை வழிகாட்டிய பின்னணிப் பற்றியும் பரத் அருண் பேசியுள்ளார்.

- Advertisement -

கவாஸ்கருக்கு பின்:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் பரத் அருண் பேசியது பின்வருமாறு. “மிகவும் இளம் வயதிலிருந்தே எனக்கு தெரிந்த ஒரு பேட்ஸ்மேனை நீங்கள் பெயரிடச் சொன்னால் அது முரளி விஜய் ஆவார். நான் அவரை கல்லூரி போட்டியில் பார்த்தேன். அப்போது சிறப்பாக விளையாடிய அவரை மற்றொரு முதல் டிவிசன் அணியில் விளையாடுவதற்கும் பரிந்துரை செய்தேன். அப்படித் தான் அவருடைய பயணம் துவங்கியது”

“அதன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடிய முரளி விஜய் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கருக்கு பின் சிறந்த துவக்க வீரர் என்று ரவி சாஸ்திரி அடிக்கடி சொன்னார். இன்று அது மிகப்பெரிய அங்கீகாரமாகும். அந்த வகையில் முரளி விஜயுடன் நான் பேசிய அம்சங்கள் சிறப்பானதாகும். அவர் எனக்கு மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவர்” என்று கூறினார்.

- Advertisement -

முன்னதாக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான முரளி விஜய் 61 டெஸ்ட் மற்றும் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2010 – 2015 வரையிலான காலகட்டங்களில் சிறப்பாக விளையாடிய அவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சதமடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதையும் படிங்க: இனிமேலும் சான்ஸ் கிடைக்காது.. அவங்களாச்சும் நல்லாருக்கட்டும்.. 34 வயதில் ஓய்வை அறிவித்த இந்திய வீரர்

அந்த வகையில் 61 போட்டியில் 12 சதங்கள் உட்பட 3982 ரன்கள் அடித்து கிளாஸ் பேட்ஸ்மேன் என்று ஒரு கட்டத்தில் பெயர் வாங்கிய முரளி விஜய் நாளடைவில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டார். அதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் சுமாராக செயல்பட்டதால் 2018ஆம் ஆண்டுடன் இந்திய கிரிக்கெட் அணியில் மொத்தமான கழற்றி விடப்பட்ட அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement