ரகானே தடுமாற இது தான் காரணம்.. இன்ஸ்டாகிராமில் தவறை சுட்டிக்காட்டிய சைன்டிஸ்ட் அஸ்வின்?

Ashwin and Rahane
- Advertisement -

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் ரஞ்சிக்கோப்பை 2024 தொடரின் மாபெரும் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது. மார்ச் 10ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை சர்துள் தாக்கூர் 75 ரன்கள் எடுத்த உதவியுடன் 224 ரன்கள் சேர்த்தது. அதன் பின் விளையாடிய விதர்பா சுமாராக பேட்டிங் செய்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக தவால் குல்கர்னி, சம்ஸ் முலானி, தானுஷ் கோட்டியான் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் பின் 119 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய மும்பை தங்களுடைய 2வது இன்னிங்சில் தரமாக விளையாடி 418 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முஷீர் கான் 136 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

சுட்டிக்காட்டிய அஸ்வின்:
அத்துடன் ஸ்ரேயாஸ் ஐயர் 95, கேப்டன் ரகானே 73, சாம்ஸ் முலானி 50* ரன்கள் எடுத்த நிலையில் விதர்பா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷ் துபே 5 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 538 என்ற கடினமான இலக்கை துரத்தும் விதர்பா மூன்றாவது நாள் முடிவில் 10/0 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பையின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் அஜிங்கிய ரகானே 35 பந்துகளில் வெறும் 7 ரன்களில் அவுட்டானார்.

சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டதால் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட அவர் இந்த ரஞ்சிக் கோப்பையிலும் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அந்த சூழ்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் வீசிய ஒரு பந்தை எதிர்கொண்ட அவர் அடிக்காமல் தவற விட்டு காலில் வாங்கினார். அதனால் விதர்பா அணியினர் அவுட் கேட்டும் நடுவர் கொடுக்கவில்லை.

- Advertisement -

அதை விதர்பா ரிவியூ செய்த போது ஸ்டம்ப் மீது முழுமையாக பந்து அடிக்காததால் தப்பிய ரகானே தொடர்ந்து விளையாடி 73 ரன்கள் எடுத்தார். இருப்பினும் அந்த சமயத்தில் அவருடைய பேட்டிங் டெக்னிக்கில் இருந்த தவறை ரவிச்சந்திரன் அஸ்வின் இன்ஸ்டாகிராமில் சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது பந்தை எதிர்கொள்ளும் போது அவருடைய தலை ஸ்டேன்ஸ்க்கு நேராக இல்லை என்பதை கோடிட்டு அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இந்தாண்டு ஒரு போட்டியில் மட்டும் முழு பிங்க் நிற ஜெர்சியில் விளையாட இருக்கும் ராஜஸ்தான் அணி – காரணம் என்ன?

இதைத் தொடர்ந்து 2024 ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரகானே விளையாட உள்ளார். கடந்த வருடம் அந்த அணியில் விளையாடி அபாரமாக செயல்பட்டதால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரகானே தேர்வானார். எனவே அதே போல இம்முறையும் அவர் கம்பேக் கொடுக்க முயற்சிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement