இந்தாண்டு ஒரு போட்டியில் மட்டும் முழு பிங்க் நிற ஜெர்சியில் விளையாட இருக்கும் ராஜஸ்தான் அணி – காரணம் என்ன?

RR
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான 17 வது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 22-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன.

இந்த தொடருக்காக தற்போது பத்து அணிகளும் தங்களது அணி வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் ஒரு போட்டியின் போது ராஜஸ்தான் அணி முழு பிங்க் நிற சீருடை அணிந்து விளையாட இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆண்டுதோறும் பெங்களூரு அணி இயற்கையை முன்னிறுத்தி பச்சை நிற சீருடையை அணிந்து விளையாடுவது வழக்கம்.

அதேபோன்று மும்பை அணியும் சில காரணங்களுக்காக வெளிர் நீல நிற சீருடை அணிந்து விளையாடி சில முக்கிய கருத்துகளை வெளியிடும். அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பெங்களூர் அணிக்கெதிரான போட்டியின் போது பிங்க் நிற ஜெர்சியினை அணிந்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

அந்த ஒரு போட்டியின் போது மட்டுமே பிங்க் ஜெர்சியுடன் ராஜஸ்தான் அணி விளையாடும் என அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு காரணம் யாதெனில் : இந்தியா முழுவதும் உள்ள மகளிரை கவுரவிக்கும் விதமாக பிங்க் நிற சீருடையில் விளையாட இருப்பதாகவும் ராஜஸ்தான் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியா நினைச்சாலும் அவங்க விடமாட்டாங்க.. விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் ஆடுவாரு.. ஸ்டுவர்ட் ப்ராட் சொல்லும் காரணம்

இதற்கான ஜெர்சி வெளியீட்டு நிகழ்ச்சியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் அந்த அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement