இந்தியா நினைச்சாலும் அவங்க விடமாட்டாங்க.. விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் ஆடுவாரு.. ஸ்டுவர்ட் ப்ராட் சொல்லும் காரணம்

Stuart Broad 4
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வெல்வதற்கு போராட உள்ளது. அந்த சூழ்நிலையில் 2024 உலகக் கோப்பையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியை கழற்றி விடுவதற்கு தேர்வுக் குழு ஆலோசித்து வருவதாக செய்திகள் வலம் வருகின்றன.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உள்ள ஆடுகளங்கள் மிகவும் மெதுவாக இருக்கும். எனவே அங்கு நடைபெறும் டி20 கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று மெதுவாக விளையாடக்கூடிய விராட் கோலியின் அணுகுமுறை பொருந்தாது என்று தேர்வு குழுவினர் கருதுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விராட் கோலியை கழற்றி விட தேர்வுக் குழு முடிவு எடுத்துள்ளதாகவும் செய்தி வந்தது ரசிகர்களை கடுப்பேற்றியது.

- Advertisement -

ப்ராட் கருத்து:
ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை மகத்தான இன்னிங்ஸ் விளையாடி காப்பாற்றிய விராட் கோலி காலத்திற்கும் மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மேலும் அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் சாதனை படைத்த அவர் 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் அடித்து தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

அதை விட வெஸ்ட் இண்டீஸ் மட்டுமல்லாமல் உலகின் அனைத்து வெளிநாட்டு மைதானங்களிலும் ஏற்கனவே சிறப்பாக விளையாடிய விராட் கோலி தன்னை உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதை நிரூபித்தவர். அப்படிப்பட்ட அவரை கழற்றி விட நினைப்பது இந்தியாவுக்கு தான் பின்னடைவை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டியை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐசிசி நடத்த உள்ளதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். எனவே இந்தியா கழற்றிவிட நினைத்தாலும் உலகின் சூப்பர் ஸ்டார் வீரராக கருதப்படும் விராட் கோலியை அதில் ஐசிசி விளையாட வைக்கும் என்று பிராட் மறைமுகமாக கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: கண்ணீர் விட்டு அழுதப்போ.. தோனி மாதிரி சுயநலமின்றி ரோஹித் ஹெல்ப் பண்ணாரு.. அஸ்வின் உருக்கமான பாராட்டு

“இந்த செய்தி உண்மையாக இருக்க முடியாது. விளையாட்டை ரசிகர்களின் பார்வையில் வளர்ப்பதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டியை அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் ஐசிசி வைத்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் விராட் கோலி உலகில் எந்த வீரரையும் விட மகத்தானவர். எனவே அவர் கண்டிப்பாக அந்த உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement