100வது போட்டி எப்போவோ நடந்துருக்க வேண்டியது.. எனக்கு மட்டும் ஏமாற்றம்.. கும்ப்ளேவுக்கு அஸ்வின் ஆதங்க பதில்

- Advertisement -

தரம்சாலாவில் மார்ச் 7ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 100வது போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 99 போட்டிகளில் 507* விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

ஆனாலும் அவரை வெளிநாட்டில் சரிபட்டு வரமாட்டார் என்று கருதும் இந்திய அணி நிர்வாகம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போன்ற வெளிநாட்டு போட்டிகளில் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால் எப்போதோ 100வது போட்டியில் விளையாட வேண்டிய அஸ்வின் இப்போது தான் அந்த மைல்கல்லை தொட்டுள்ளார். இதை வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் அஸ்வின் அறிமுகமான அதே 2011இல் விளையாடத் துவங்கிய ஆஸ்திரேலியாவின் நேத்தன் லயன் தற்போது 128 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

அஸ்வின் ஆதங்கம்:
இந்நிலையில் இது பற்றி அஸ்வினிடம் நேராக ஜாம்பவான் அனில் கும்ப்ளே சமீபத்திய பேட்டியில் கேள்வி எழுப்பியது பின்வருமாறு. “உங்களுடைய 100வது டெஸ்ட் போட்டி முன்கூட்டியே வந்திருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்ற போது நீங்கள் அங்கே போதுமான அளவுக்கு விளையாடவில்லை”

“பேட்ஸ்மேன்களும் அது போன்ற சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றனர். ஆனால் ஒரு முன்னணி பவுலராக உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் உங்களின் தகுதியை சந்தேகிக்கிறீர்களா? அது எப்படி உணர்கிறது” என்று கேட்டார். அதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதங்கத்துடன் பதிலளித்தது பின்வருமாறு. “நான் சர்ச்சையை ஏற்படுத்த விரும்பவில்லை. இதை உலகில் நடைபெறும் மற்ற பல்வேறு விஷயங்களுடன் என்னால் ஒப்பிட முடியும்”

- Advertisement -

“ஆனால் எப்போதுமே பேட்ஸ்மன்களுக்கு அடுத்தபடியாக தான் பவுலர்கள் இருக்கின்றனர். அதாவது எனக்குத் தோல்வியை சந்திக்க ஒரு வாய்ப்பு மட்டுமே கிடைக்கும் போது மற்றவர்களுக்கு மட்டும் ஏன் தோல்வியை சந்திக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கிறது? இருப்பினும் அணி வெல்ல வேண்டும் என்பதற்காக என்னை நான் அமைதிப்படுத்திக் கொள்கிறேன். எனவே விளையாடா விட்டாலும் 5 நாட்கள் கழித்து இந்தியா வென்றால் உடைமாற்றும் அறையில் நான் மகிழ்ச்சியான நபராக இருப்பேன்”

இதையும் படிங்க: 2012இல் சந்திச்ச தோல்வி தான் என் கேரியரின் டர்னிங் பாய்ண்ட்.. 100வது போட்டிக்கு முன் அஸ்வின் பேட்டி

“சிறிய வயதில் இருந்த போது இந்திய ஜெர்சியை ஒருநாள் அணிய வேண்டும் என்ற கனவுடன் இருந்தேன். எனவே இன்று நான் இருக்கும் நிலைக்காக அணியை விட என்னை சுயநலமாக முன்னிலைப்படுத்த மாட்டேன். ஆம் அதற்காக ஏமாற்றமான நாட்களை சந்தித்தேன். ஆனால் இதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்ட நான் இந்தியா உருவாக்கிய சில மகத்தான வீரர்களுடன் விளையாடிய மகிழ்ச்சியை கொண்டுள்ளேன்” என்று கூறினார்.

Advertisement