2012இல் சந்திச்ச தோல்வி தான் என் கேரியரின் டர்னிங் பாய்ண்ட்.. 100வது போட்டிக்கு முன் அஸ்வின் பேட்டி

Ravichandran Ashwin
- Advertisement -

தர்மசாலாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி துவங்க உள்ளது. அதில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சாதனை படைக்க உள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 99 போட்டிகளில் 507* விக்கெட்களை எடுத்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

அத்துடன் அதிவேகமாக 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ள அவர் 3000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இந்த 100வது போட்டிக்காக தம்மை விட தமக்கு ஆதரவு கொடுத்த அம்மா, அப்பா, மனைவி மற்றும் குழந்தைகள் ஆவலுடன் காத்திருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

டர்னிங் பாய்ண்ட்:
மேலும் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் மோசமாக பந்து வீசி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது தம்முடைய கேரியரில் திருப்பு முனையாக அமைந்ததாகவும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “100வது டெஸ்ட் போட்டி எனக்கு பெரியதாகும். அதை விட அது என்னுடைய அம்மா, அப்பா, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இன்னும் பெரியதாகும்”

“குறிப்பாக என்னுடைய குழந்தைகள் அந்த போட்டிக்காக அதிக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒரு வீரரின் பயணத்தில் குடும்பத்தினர் அதிகம் பங்காற்றுகின்றனர். இப்போதும் என்னுடைய தந்தை போட்டியின் போது தனது மகன் என்ன செய்கிறார் என்பது பற்றி 40 முறை போனில் அழைத்து கேட்கிறார். இந்தப் பெரிய தருணத்தில் இலக்கை விட பயணம் சிறப்பு வாய்ந்தது. இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த தொடரில் குக், பீட்டர்சன் ஆகியோர் ரன்கள் அடித்தனர்”

- Advertisement -

“அதுவே நன்றாக எனக்கு திருப்பு முனையாக அமைந்தது. ஏனெனில் அதன் காரணமாக என்னை அணியிலிருந்து நீக்குவதற்கான பேச்சுக்கள் எழுந்தது. இருப்பினும் அது குறைந்தபட்சம் நான் 5% முன்னேறுவதற்கான அற்புதமான பாடத்தை கொடுத்தது. அப்போதிலிருந்து நான் பள்ளங்களை அலசி வருகிறேன்” என்று கூறினார். அவர் கூறும் 2012 தொடரில் அலெஸ்டர் குக், பீட்டர்சன் போன்ற இங்கிலாந்து வீரர்கள் புதிதாக அறிமுகமாகியிருந்த அஸ்வின் ஜடேஜாவை வெளுத்து வாங்கி தோனி தலைமையிலான இந்திய அணியை தோற்கடித்தனர்.

இதையும் படிங்க: 2008இல் 5 வெளிநாட்டு பிளேயர்ஸ் சவாலா இருந்தாங்க.. ஐபிஎல் தொடரில் கற்றுக் கொண்டதை பற்றி பேசிய தோனி

சொல்லப்போனால் அதுவே கடைசியாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் தோற்ற ஒரு டெஸ்ட் தொடராகும். அதன் பின் முன்னேற்றத்தை சந்தித்த அஸ்வின் கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு தொடரில் கூட இந்தியா தோற்காமல் இருந்து வருவதற்கு முக்கிய பங்காற்றி வருகிறார் என்றே சொல்லலாம்.

Advertisement