2008இல் 5 வெளிநாட்டு பிளேயர்ஸ் சவாலா இருந்தாங்க.. ஐபிஎல் தொடரில் கற்றுக் கொண்டதை பற்றி பேசிய தோனி

MS Dhoni 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. அதற்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த அனுபவமிக்க ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி துணையாக நிற்க உள்ளார்.

பஞ்சாப், டெல்லி போன்ற மற்ற அணிகளில் வருடத்திற்கு ஒரு கேப்டன்கள் மாறும் நிலையில் ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி சென்னை அணிக்கு வரப்பிரசாதமாக திகழ்கிறார் என்றே சொல்லலாம். கடந்த 16 வருடங்களில் 226 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள தோனி 133 வெற்றிகளை பெற்று 5 ஐபிஎல் கோப்பை, 2 சாம்பியன் லீக் டி20 கோப்பைகளை வென்ற பெருமைக்குரியவர்.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் பாடம்:
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டை விட வெளிநாட்டு வீரர்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஐபிஎல் தொடர் தான் தமக்கு உதவியதாக எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார். மேலும் ஐபிஎல் துவக்கப்பட்ட 2008 சீசனில் ஹெய்டன், முரளிதரன் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5 வெளிநாட்டு வீரர்களை புரிந்து கொண்டு கேப்டனாக செயல்பட்டது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக தெரிவிக்கும் தோனி இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“வெளிநாட்டு வீரர்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு ஐபிஎல் எனக்கு வாய்ப்பு கொடுத்தது. பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டில் நான் எதிரணி வீரர்களிடம் அதிகம் பேச மாட்டேன். ஆனால் வெளிநாட்டு வீரர்கள் கிரிக்கெட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள், அவர்களுடைய கலாச்சாரம் என்ன என்பது போன்றவற்றை ஐபிஎல் தொடரால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 2008 சென்னை அணி நல்ல ஆல் ரவுண்டர்களுடன் சமநிலையுடன் இருந்தது”

- Advertisement -

“குறிப்பாக மேத்யூ ஹைடன், மைக் ஹசி, முத்தையா முரளிதரன், மஹாயா நிடினி, ஜேக்கப் ஓரம் போன்ற அனுபவம் மிகுந்த வீரர்களை எங்களுடைய அணி கொண்டிருந்தது. அந்த அனைவரையும் ஒரே அணியில் வைத்திருந்து அவர்களை புரிந்து கொண்டு செயல்பட்டது மிகப்பெரிய சவாலாக இருந்தது. பொதுவாக நீங்கள் அணியை வழி நடத்தும் போது அதில் உள்ள ஒவ்வொரு வீரர்களையும் புரிந்து கொள்வது அவசியம் என்று நான் நம்புவேன்”

இதையும் படிங்க: ஏகப்பட்ட ட்ரிக் வெச்சுருக்காரு.. பழைய பந்தை பாக்கவே முடியாது.. 100வது போட்டியில் அஸ்வினை பாராட்டிய ரூட்

“அதே சமயம் ஒருமுறை நீங்கள் உங்களுடைய வீரர்களின் பலம் பலவீனம் ஆகியவற்றை தெரிந்து கொண்டால் பின்னர் அணியை சரியான பாதையில் நடத்துவது எளிதாகி விடும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த வருடம் சென்னையில் துவங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement