ஏகப்பட்ட ட்ரிக் வெச்சுருக்காரு.. பழைய பந்தை பாக்கவே முடியாது.. 100வது போட்டியில் அஸ்வினை பாராட்டிய ரூட்

Joe Root 8
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மார்ச் ஏழாம் தேதி தரம்சாலாவில் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பத்தில் சொந்த மண்ணில் மட்டும் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் நாளடைவில் அனுபவத்தால் முன்னேறிய அவர் தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் நல்ல விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்.

ஆனால் இந்திய அணி நிர்வாகம் தான் அவரை நம்பி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போன்ற வெளிநாட்டுப் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது வேறு கதை. இருப்பினும் தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாகவே செயல்பட்டு வரும் அஸ்வின் இதுவரை 99 போட்டிகளில் 507* விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியின் பல மகத்தான வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

ஜோ ரூட் பாராட்டு:
மேலும் அதிவேகமாக 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ள அவர் உலகிலேயே 250 இடது கை மற்றும் 250 வலது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில் முந்தைய பந்தை மீண்டும் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு ஒவ்வொரு முறையும் புதிய பந்தை வீசுவதே அஸ்வினுடைய ஸ்பெஷல் என்று இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் பாராட்டியுள்ளார்.

அத்துடன் பேட்ஸ்மேன்களை திணறடிக்க கேரம் பால் உட்பட நிறைய வித்தைகளை வைத்திருக்கும் அஸ்வினுக்கு 100வது போட்டிக்கு முன்பாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஜோ ரூட் கொடுத்த பாராட்டு பின்வருமாறு. “அஸ்வின் நீண்ட நேரம் உங்களை சோர்வடைய வைப்பதற்கு பதிலாக அவுட்டாக்கி வெளியே அனுப்புவதற்கான வழியை கண்டறிய முயற்சி செய்வார். அவர் பாரம்பரிய ஆஃப் ஸ்பின்னர்களில் இருந்து வித்தியாசமாக கிரீஸை பயன்படுத்துவார்”

- Advertisement -

“அவர் ஓவர் ஸ்பின், சைட் ஸ்பின் ஆகியவற்றை பயன்படுத்துகிறார். ஸ்டம்ப்புகளை இறுக்கமாக பிடிக்கும் பந்துகள், அகலமாக செல்லும் பந்துகள், கேரம் பந்துகள் போன்றவற்றையும் அவர் பெற்றுள்ளார். அந்த வகையில் அவரிடம் வித்தியாசமான வித்தைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். எனவே அவர் முன்வைக்கும் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ருதுராஜ், ஜடேஜா இல்ல.. அவர் தான் சிஎஸ்கே அணியின் அதிக மதிப்புமிக்க பிளேயரா இருப்பாரு.. ஆகாஷ் சோப்ரா அதிரடி கணிப்பு

“அஸ்வின் எப்போதும் முந்தைய பந்தை நீங்கள் மறுபடியும் எதிர்கொள்ள விடாமல் பார்த்துக் கொள்வார். அவர் உங்களை வெள்ளைக் கோட்டின் குறுக்கே இழுத்து வந்து தலையை ஒரு பக்கம் கொண்டு சென்று பேட்டின் இரு புறங்களிலும் எட்ஜ் கொடுக்க வைப்பதில் வல்லவர்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து கடைசி போட்டியிலும் இங்கிலாந்தை தோற்கடித்து 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement