- Advertisement -
ஆசிய கோப்பை

சஞ்சு சாம்சனின் 22 டக் வாக்குறுதியை காப்பாற்றிய கம்பீர்.. கொஞ்சம் இதை செஞ்சா நல்லாருக்கும்.. அஸ்வின் கருத்து

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் அமீரகத்தை தோற்கடித்து அசத்தியது. முன்னதாக அப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் ஓப்பனிங்கில் அபிஷேக் சர்மாவுடன் ஜோடியாக களமிறங்குவார் என்று நம்பப்பட்டது.

மறுபுறம் சஞ்சு சாம்சன் எப்போதுமே மிடில் ஆர்டரில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடியதில்லை. எனவே 2025 ஐபிஎல் கோப்பையை மிடில் ஆடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வெல்ல உதவிய ஜிதேஷ் சர்மா கீப்பராக விளையாடுவார் என்று நம்பப்பட்டது. இருப்பினும் ஓப்பனிங்கில் 3 சதங்கள் அடித்து அசத்திய சாம்சனின் செயல்பாடுகளை மதித்த கௌதம் கம்பீர் அமீரகத்துக்கு எதிரானப் போட்டியில் பெஞ்சில் அமர வைக்காமல் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார்.

- Advertisement -

காப்பாற்றிய கம்பீர்:

இதற்கிடையே மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்த தம்மிடம் தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்குவேன் என்று கௌதம் கம்பீர் வாக்குறுதியளித்ததாக கடந்த மாதம் ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலில் சாம்சன் தெரிவித்திருந்தார். ஒருவேளை 22 போட்டிகளில் டக் அவுட்டானால் மட்டுமே உங்களை அணியிலிருந்து நீக்குவேன் என்றும் கம்பீர் சொன்னதாகவும் சாம்சன் கூறியிருந்தார். அந்த தன்னம்பிக்கையே தமக்கு ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாட உதவியதாகவும் சாம்சன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆசியக் கோப்பையில் சாம்சனிடம் கொடுத்த 22 டக் அவுட் வாக்குறுதியை கௌதம் கம்பீர் காப்பாற்றியுள்ளதாக அஸ்வின் பாராட்டியுள்ளார். ஆனால் சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் அதிகம் அசத்துகிறார் என்பதால் அவருக்கு அங்கே விளையாடும் வாய்ப்பைக் கொடுங்கள் என்றும் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

அஸ்வின் கோரிக்கை:

“சாம்சனுக்கு கிடைக்கும் ஆச்சரியமான ஆதரவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மீது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் காட்டும் அக்கறை சிறப்பானது. சாம்சனை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று சூரியகுமார் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னது களத்தில் தெரிகிறது. இருப்பினும் சஞ்சு விளையாட வேண்டுமெனில் அவர் பவர் பிளேவில் செயல்படுத்துபவராக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: கில் கொடுத்து வெச்சவரு.. அந்த 2 திறமையான வீரர்களை வீட்டுக்கு அனுப்பிட்டு தட்டில் ஏந்துறாங்க.. ஜடேஜா பேட்டி

“பவர்பிளேவில் விக்கெட் விழுந்தால் அங்கே சாம்சன் சென்று விளையாட வேண்டும். இதுவே சஞ்சு சாம்சன் ப்ராஜெக்ட். அவரை நான் பேட்டி எடுத்த போது 21 முறை டக் அவுட்டானாலும் 22வது போட்டியில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் என்று கம்பீர் சொன்னதாக சாம்சன் தெரிவித்தார். அந்த தன்னம்பிக்கையையே அவருக்கு கம்பீர், சூரியகுமார் கொடுத்துள்ளார்கள். அது சாம்சன் மேஜைக்கு கொண்டு வரும் விஷயங்களை அணி நிர்வாகம் ஆதரிப்பதைக் காட்டுகிறது” என்று கூறினார்.

- Advertisement -