ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முன்னதாக இந்தத் தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஓரளவு சிறப்பாக விளையாடினார்.
இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் 150 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடிக்கத் தடுமாறிய அவருக்கு பதிலாக அபிஷேக் சர்மா, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஓபனில் களமிறக்கப்பட்டனர். அந்த வாய்ப்பில் அந்த மூவருமே சிறப்பாக அசத்திய நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்றார். 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்த அவர் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார்.
கொடுத்த வைத்த கில்:
2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் 11 வருடங்கள் கழித்து பஞ்சாப்பை ஃபைனலுக்கு அழைத்து சென்றார். ஆனால் சுப்மன் கில்லை வருங்கால கேப்டனாக வளர்க்க விரும்பும் பிசிசிஐ ஸ்ரேயாஸையும் ஜெய்ஸ்வாலையும் ஆசியக் கோப்பையில் கழற்றி விட்டது. மேலும் ஓப்பனிங்கில் 3 சதங்களை அடித்த சாம்சனை மிடில் ஆடரில் களமிறக்கிய இந்திய அணி நிர்வாகம் சுப்மன் கில்லுக்கு ஓப்பனிங்கில் களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஓப்பனிங்கில் களமிறங்கும் வாய்ப்பைப் பெறுமளவுக்கு சுப்மன் கில் கொடுத்து வைத்திருப்பதாக முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். சுப்மன் கில்லை பிசிசிஐ தங்கத்தட்டில் ஏந்துவது பற்றி அவர் மறைமுகமாக பேசியது பின்வருமாறு. “கில் இந்திய கிரிக்கெட்டின் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்”
அஜய் ஜடேஜா கருத்து:
“ஸ்பெஷல் திறமையைக் கொண்டுள்ள அவர் மேல் அனைவரும் அதிகப்படியான எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். இங்கே ஒருவர் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ், சஞ்சு சாம்சன் ஆகியோரைக் காட்டிலும் முதன்மையானவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் எவ்வளவு பிரமாதமானவராக இருப்பீர்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். தொடர்ச்சியாக அசத்தும் அவர் இந்தியாவின் வருங்கால கேப்டனாக பார்க்கப்படுகிறார்”
இதையும் படிங்க: ஸ்ரேயாஸை கொண்டு வரவே சஞ்சு சாம்சனை பலி கிடாவாக்குறாங்க.. கம்பீரின் ஸ்கெட்ச் பற்றி ஸ்ரீகாந்த் பேட்டி
“அதனாலேயே அவருக்கு இவ்வளவு சாதகங்கள் கிடைக்கிறது. இந்த பாக்கியம் மட்டுமே அவருக்கு ஒரே அழுத்தமாக இருக்கும். அணியில் அவருக்கான இடத்தைப் பற்றி கவலையில்லை. அமீரகத்துக்கு எதிரானப் போட்டியில் அவர் விளையாடிய சிறிய இன்னிங்ஸ் நம்பிக்கைக்கு பாத்திரமாக அமைந்தது. நீங்கள் 8 பேட்ஸ்மேன்களுடன் விளையாடும் போது நிலைத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. முன்னோக்கி செல்கையில் அவருடைய ஸ்ட்ரைக்ரேட் முன்னேறலாம். ஆனால் நிலைத்தன்மை குறையலாம்” என்று கூறினார்.



