ஸ்ரேயாஸை கொண்டு வரவே சஞ்சு சாம்சனை பலி கிடாவாக்குறாங்க.. கம்பீரின் ஸ்கெட்ச் பற்றி ஸ்ரீகாந்த் பேட்டி

K Srikkanth
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2025 ஆசியக் கோப்பையில் தங்களது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக இத்தொடரின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அதனால் பிளேயிங் லெவனில் நேரடியாக வாய்ப்பு பெற்ற அவர் உள்ள ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.

அதனால் ஓப்பனிங்கில் விளையாடி வந்த சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வந்த பின் அபாரமாக விளையாடிய அவர் 3 சதங்கள் அடித்து நிலையான இடத்தைப் பிடித்தார். எனவே அவருடைய செயல்பாடுகளுக்கு மதிப்பு கொடுத்த பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயருக்காக பலிகிடா:

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய டி20 அணிக்குள் கொண்டு வருவதற்காகவே கெளதம் கம்பீர் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனை விளையாட வைத்துள்ளதாக முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். ஏனெனில் 2015இல் அறிமுகமான சாம்சன் 20.62 என்ற சராசரியில் எப்போதுமே மிடில் ஆர்டரில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடியதில்லை என்று அவர் கூறியுள்ளார். அதே போல மிடில் ஆடரில் மீண்டும் தடுமாற்றமாக விளையாடினால் அதையே காரணமாக வைத்து சாம்சனை கழற்றி விட முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே சஞ்சு சாம்சன் பலி கிடாவாக மாறப்போவதாக மறைமுகமாக தெரிவிக்கும் ஸ்ரீகாந்த் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சன் 5வது இடத்தில் விளையாடுவது ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வருவதற்கான வழியை உருவாக்கும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் சஞ்சு 5வது இடத்தில் அதிகம் விளையாடியதில்லை. அவர் அங்கே விளையாடவும் கூடாது”

- Advertisement -

ஸ்ரீகாந்த் கருத்து:

“இருப்பினும் 5வது இடத்தில் விளையாடுவது அவருடைய தன்னம்பிக்கையை சிதைக்கும். அவருடைய இந்த நிலைமைக்காக நான் அதிகம் மகிழ்ச்சியாக இல்லை. இதுவே கடைசி வாய்ப்பு என்று நான் சஞ்சுவை எச்சரிப்பேன். குறிப்பாக அடுத்த 3 இன்னிங்ஸில் சாம்சன் 5வது இடத்தில் சிறப்பாக விளையாடத் தவறினால் ஸ்ரேயாஸ் ஐயர் வருவார் என்றும் அவரிடம் நான் சொல்வேன்”

இதையும் படிங்க: டி20 போட்டியில் பும்ராவை விட அவரு தான் ஸ்பெஷலிஸ்ட்.. அவரை டீமுக்குள் கொண்டு வாங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து

“சஞ்சுவை அவர்கள் மிடில் ஆடரில் விளையாட வைத்து ஃபினிஷராக பயன்படுத்துவார்களா? கண்டிப்பாக கிடையாது. அதற்கு ஹர்திக் பாண்டியா, சிவம் துபே இருக்கிறார்கள். எனவே சாம்சன் 5வது இடத்தில் அசத்துவாரா? என்பது கேள்விக்குறியாகும். ஆசியக் கோப்பையில் ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக நீங்கள் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது நல்லது. ஆனால் டி20 உலகக் கோப்பையில் என்ன நடக்கும்?” என்று கூறினார்.

Advertisement