
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி தயாராக இருக்கிறது. அதற்காக நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதைத்தொடர்ந்து சாம்பியன்ஸ் கோப்பையில் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை துபாயில் எதிர்கொள்கிறது.
முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகினார். அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா தேர்வான நிலையில் ஜெய்ஸ்வால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய 4 ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்.
அந்த நிலையில் வருணை 5வது ஸ்பின்னராக தேர்வு செய்துள்ளது தமது கண்ணோட்டத்தில் தவறானதாக இருப்பதாக ரவிச்சந்திரன் விமர்சித்துள்ளார். ஏனெனில் பிட்ச் அதிகமாக சுழல்வதற்கு துபாய் ஒன்றும் சென்னை கிடையாது என்று அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். அணித் தேர்வில் பயிற்சியாளர் கெளதம் கம்பீரின் தவறான அணுகுமுறை பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “துபாய்க்கு நாம் இத்தனை ஸ்பின்னர்களை எடுத்துச் செல்வதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை”
“5 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்துள்ள நாம் ஜெய்ஸ்வாலை அமர வைத்துள்ளோம். 3 – 4 ஸ்பின்னர்களை எடுத்துச் செல்வதை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் துபாய்க்கு 5 ஸ்பின்னர்கள் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அதில் குறைந்தது ஒரு ஸ்பின்னர் நாம் எக்ஸ்ட்ரா எடுத்துள்ளோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் உங்களிடம் சிறந்த ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 2 இடது கை ஸ்பின்னர்கள் உள்ளார்கள்”
“எனவே ஜடேஜா, அக்சர் பட்டேல் எப்படியும் விளையாடப் போகிறார்கள். பாண்டியாவுடன் குல்தீப் விளையாடுவார். உங்களுக்கு வருண் வேண்டுமானால் எடுத்துச் செல்லுங்கள். அதற்கு ஒரு வேகப்பந்து வீச்சாளரை உட்கார வைத்து பாண்டியாவை இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராகப் பயன்படுத்தலாம். இல்லையெனில் நீங்கள் ஒரு ஸ்பின்னரை நீக்கி மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரை கொண்டு வர வேண்டும்”
இதையும் படிங்க: தயவுசெய்து என்னை அப்படி கூப்பிடாதீங்க.. ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட பாபர் அசாம் – விவரம் இதோ
“குல்தீப் நிச்சயம் விளையாடுவார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. வருண் நன்றாக பவுலிங் செய்கிறாரா? ஒருவேளை நீங்கள் அவர்கள் இருவரையும் கூட பயன்படுத்தலாம். ஆனால் என்னுடைய கேள்வி என்னவெனில் துபாயில் அந்தளவுக்கு பந்து சுழலுமா? இந்த வகையில் நமது இந்திய அணியில் எனக்குக் கொஞ்சம் அசவுகரியமான உணர்வு ஏற்படுகிறது” எனக் கூறினார்.