தயவுசெய்து என்னை அப்படி கூப்பிடாதீங்க.. ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட பாபர் அசாம் – விவரம் இதோ

Babar Azam
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான பாபர் அசாம் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தின் மூலம் நட்சத்திர வீரராக வெகு விரைவிலேயே முன்னேறினார். அதனால் அவரை சிறந்த வீரர்களில் ஒருவராகவும் ரசிகர்கள் பார்த்து வந்தனர். அதுமட்டும் இன்றி விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசும் அளவிற்கு அவரை புகழ்ந்து தள்ளினார்.

ரசிகர்களுக்கு அன்புக்கட்டளை போட்ட பாபர் அசாம் :

ஆனால் அவருடைய சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் மிகவும் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் அண்மையில் தான் மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பிடித்து விளையாடினார்.

- Advertisement -

அதில் ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே சிறப்பாக விளையாடிய அவர் மற்ற போட்டிகளில் ஏமாற்றம் அளித்தார். அதிலும் குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரிலும் அவர் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிராக 10 ரன்களும், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 23 ரன்களும் மட்டுமே குவித்திருந்தார்.

இந்நிலையில் தன்னை யாரும் கிங் என்று அழைக்க வேண்டாம் என்றும் அந்த இடத்திற்கு தான் வரவில்லை என்றும் பாபர் அசாம் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறியதாவது : என்னை ரசிகர்கள் யாரும் கிங் என்று அழைக்க வேண்டாம். அப்படி கூறுவதை நிறுத்துங்கள்.

- Advertisement -

நான் இன்னும் “கிங்” என்ற பட்டத்திற்கான இடத்திற்கு வரவில்லை. கடந்த காலத்தை மறந்து விட்டு தற்போது எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது எனக்கு அணியில் ஒரு புதிய ரோல் இருக்கிறது. எனவே எனது ஆட்டத்தில் மட்டும் கவனத்தில் செலுத்தி நான் பயணிக்க உள்ளேன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பிராக்டீஸ் மேட்ச் இல்லாம நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி கோதாவில் குதிக்கும் இந்திய அணி – என்ன நடந்தது?

எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தான் மண்ணில் நடைபெறவுள்ள வேளையில் அந்த அணிக்கு பாபர் அசாமின் ஆட்டம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதோடு நடப்பு சாம்பியனான அவர்கள் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் தற்போது தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement