- Advertisement -
டி20

ஆஸியில் வரலாற்று சாதனை பெயருடன் கால்தடம் பதித்த அஸ்வின்.. வார்னர் தலைமையில் ஆட உள்ளது பற்றி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றுள்ள அவர் இந்தியாவுக்காக 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக சாதனை படைத்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருது வென்ற வீரர் என்ற முத்தையா முரளிதரன் உலக சாதனையும் அவர் சமன் செய்துள்ளார்.

அப்படிப்பட்ட அவருக்கு ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருந்த போதிலும் வெளிநாடுகளில் இந்திய அணி வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால் வருங்கால வீரர்களுக்கு வழி விட்ட அஸ்வின் கடந்த ஆஸ்திரேலிய தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓய்வுக்கு பின் அவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அஸ்வின்:

அங்கே 2025 சீசனில் சிறப்பாக விளையாடியத் தவறிய அவர் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஹாங்காங் நாட்டில் நடைபெறும் சிக்ஸர்ஸ் தொடரில் இந்திய அணிக்காக விளையாட அஸ்வின் ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புகழ்பெற்ற பிக்பேஷ் டி20 தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாட அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் வாயிலாக ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் தொடரில் விளையாடும் முதல் கேப்ட் இந்திய வீரர் (சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடிய வீரர்) என்ற வரலாற்றை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் கடந்த பல வருடங்களாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடுகின்றனர். ஆனால் இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடக்கூடாது என்று பிசிசிஐ கட்டுப்பாடு விதித்திருந்தது.

- Advertisement -

வார்னர் தலைமையில்:

தற்போது ஓய்வு பெற்றுள்ள அஸ்வின் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இல்லாததால் ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னர் தலைமையிலான சிட்னி அணிக்காக விளையாட உள்ளார். இதனால் வருங்காலங்களில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெறாத தரமான வீரர்கள் பிக்பேஷ் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெறுவார்கள் என்றே சொல்லலாம். இந்த வரலாற்று முடிவு பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: கருண் நாயரை தாண்டி தேவ்தத் படிக்கலை தேர்வு செய்தது ஏன்? தெளிவான விளக்கத்தை அளித்த – அஜித் அகார்கர்

“என்னை எப்படி உபயோகப்படுத்த உள்ளார்கள் என்பதில் சிட்னி அணியினர் தெளிவாக உள்ளனர். என்னை ஆதரிக்கும் அளவுக்கு அவர்கள் தைரியமாகவும் உள்ளனர். அந்த அணியின் தலைமை நிர்வாகத்துடன் என்னுடைய உரையாடல்கள் சிறப்பாக இருந்தன. நாங்கள் எங்களுடைய வேலைகளில் முழுமையாக இணைந்துள்ளோம். டேவிட் வார்னர் விளையாட்டை எப்படி விளையாடுகிறார் என்பதை நானும் விரும்புகிறேன். உங்களுடைய தலைவர் தனது மனநிலையை பகிர்ந்து கொள்ளும் போது விஷயங்கள் சிறப்பாகும். எனவே தண்டர்ஸ் அணிக்காக விளையாட என்னால் காத்திருக்க முடியவில்லை” என்று கூறினார்.

- Advertisement -