வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்படி வெளியான அறிவிப்பில் 15 வீரர்களுக்கு இடம் கிடைத்திருந்த வேளையில் கடந்த இங்கிலாந்து தொடரின் போது இந்திய அணிக்காக மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்திருந்த கருண் நாயர் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தேவ்தத் படிக்கலை நீக்கியது ஏன்? : அஜித் அகார்கர்
உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி மீண்டும் டெஸ்ட் வாய்ப்பினை எட்டிப் பிடித்திருந்த கருண் நாயருக்கு இன்னும் சில வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் இங்கிலாந்து தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அதன் காரணமாகவே இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்க எதிரான தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்த பல்வேறு விவாதங்களும் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன. அதே வேளையில் கருண் நாயர் நீக்கப்பட்டு இருந்தாலும் கர்நாடகவை சார்ந்த மற்றொரு முடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இடது கை ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இப்படி அனுபவ வீரர் கருண் நாயரை தாண்டி இளம் வீரரான படிக்கல் தேர்வு செய்யப்பட்டது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அஜித் அகார்கர் தெளிவான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நாங்கள் கருண் நாயர் மீது நிறையவே எதிர்பார்ப்பை வைத்திருந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவு அவரால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது.
ஒரு இன்னிங்ஸ்ஸை வைத்துக் கொண்டு மட்டும் நாங்கள் இந்த முடிவை எடுக்கவில்லை. இங்கிலாந்து தொடர் முழுவதுமே அவர் சிறப்பாக செயல்படவில்லை. அதேவேளையில் தேவ்தத் படிக்கலுக்கு நாங்கள் வாய்ப்பு வழங்க விரும்புகிறோம். ஏனெனில் அவர் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் விளையாடி வருகிறார். அதன் காரணமாக கருண் நாயரை தாண்டி நாங்கள் தேவ்தத் படிக்கலை தேர்வு செய்துள்ளோம்.
இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டது ஏன்? – அஜித் அகார்கர் விளக்கம்
எல்லா வீரருக்குமே 15 முதல் 20 போட்டிகள் வரை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் தற்போதைக்கு இருக்கும் சூழலில் அவ்வளவு வாய்ப்புகளை யாருக்காகவும் வழங்க முடியாது. உள்ளூர் கிரிக்கெட்டில் இப்போது படிக்கல் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்ததாலே அவரை மீண்டும் டெஸ்ட் அணிக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அகார்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



