- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மதிக்காததால் தண்டனை பெற்ற இஷான்.. இப்போ மரியாதை கொடுத்ததால் கம்பேக் பண்ணிருக்காரு.. அஸ்வின்

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் மோசமான ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லை கழற்றி விட்ட தேர்வுக்குழு கடைசி நேரத்தில் இஷான் கிசானை தேர்ந்தெடுத்துள்ளது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் கடைசி 18 சர்வதேச டி20 போட்டிகளில் கில் அரை சதம் கூட அடிக்காமல் திண்டாடி வந்தார்.

மறுபுறம் 2025 சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த இசான் கிசான் சூப்பரான ஃபார்மில் இருக்கிறார். குறிப்பாக இறுதிப்போட்டியில் சதமடித்த அவர் ஜார்கண்ட் முதல் முறையாக கோப்பையை வெல்ல உதினார். இந்நிலையில் கிரிக்கெட்டை மதிக்காததால் கழற்றி விடப்பட்ட இசான் கிசான் மீண்டும் அதற்கான மரியாதை கொடுத்ததால் கம்பேக் கொடுத்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மதிக்காத இஷான் கிசான்:

அதாவது கடந்த 2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயமடைந்த கேஎல் ராகுலுக்கு பதிலாக இசான் கிசானை இந்திய அணி விக்கெட் கீப்பராக விளையாட வைக்க விரும்பியது. அதற்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தயாராக இருங்கள் என்று அவரிடம் அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவுறுத்தினார். ஆனால் அதைக் கேட்காத இசான் கிஷான் துபாய்க்கு சென்று பார்ட்டியில் ஈடுபட்டதுடன் நேரடியாக 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக பயிற்சிகளை எடுத்தார்.

அதனால் கோபமடைந்த பிசிசிஐ அவரை இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து அதிரடியாக நீக்கியது. அதன் காரணமாக பெரிய பின்னடைவை சந்தித்த அவர் புஜ்ஜி பாபு முதல் ரஞ்சிக்கோப்பை வரை அனைத்து உள்ளூர் தொடர்களிலும் விளையாடி மீண்டும் கம்பேக் கொடுக்கப் போராடினார். அப்படி உள்ளூர் கிரிக்கெட்டுக்கு மரியாதை கொடுத்து அசத்தியதாலேயே அவர் கம்பேக் கொடுத்துள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

மதித்ததால் கம்பேக்:

“இஷானுக்கு கிரிக்கெட் பரிசை கொடுத்துள்ளது. வெளியில் இருப்பவர்கள் இதை எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் வாழ்க்கை ஒரு வட்டமாகியுள்ளது. கிரிக்கெட்டுக்கு தகுதியான மரியாதையை கொடுத்ததாலேயே இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் மீண்டும் வந்துள்ளார். அதற்காக அவர் சென்னையில் நடைபெற்ற புஜ்ஜி பாபு தொடரில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடினார்”

இதையும் படிங்க: ஒரே போட்டியில் 4 சதம்.. 149 வருடம் காணாத அரிதான உலக சாதனை படைத்த நியூஸி ஜோடி.. வெ.இ போராட்டம்

“அப்போதிலிருந்து ஜார்க்கண்ட் அணிக்காக முதன்மை வீரராக விளையாடிய அவர் உள்ளூரில் ரன்கள் குவித்தார். சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் தனது அணியை வெற்றி பெற வைத்த அவர் நன்றாக விளையாடினார். எனவே இது இசான் கிசான் என்பவரைப் பற்றியது கிடையாது. இது இசான் கிசான் என்பவர் களத்தில் நம்முடைய விளையாட்டுக்கு போதுமான மரியாதையை கொடுத்துள்ளதால் சாதித்துள்ளார் என்பதாகும்” என்று கூறினார்.

- Advertisement -