ஒரே போட்டியில் 4 சதம்.. 149 வருடம் காணாத அரிதான உலக சாதனை படைத்த நியூஸி ஜோடி.. வெ.இ போராட்டம்

NZ vs WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து தங்களது சொந்த மண்ணில் 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. 2 போட்டிகளின் முடிவில் 1 – 0* என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கும் அத்தொடரின் கடைசி போட்டி டிசம்பர் 17ஆம் தேதி மௌவுண்ட் மௌங்கனியில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 575/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வது.

அதிகபட்சமாக 323 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார துவக்கத்தைக் கொடுத்த கேப்டன் டாம் லாதம் 137 ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்து அசத்திய டேவோன் கான்வே இரட்டை சதமடித்து 277 ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக தங்களது சொந்த மண்ணில் 300+ ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் நியூஸிலாந்து ஜோடி என்ற வரலாற்றையும் அவர்கள் படைத்தனர்.

- Advertisement -

நியூஸிலாந்து அசத்தல்:

அவர்களுடன் ரச்சின் ரவீந்தரா 72 ரன்கள் எடுத்து கை கொடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜஸ்டின் க்ரிவ்ஸ், ஆண்டர்சன் பிலிப்ஸ், ஜெய்டேன் சீல்ஸ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முடிந்தளவு போராடியும் 420 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக காவெம் ஹோட்ஜ் சதமடித்து 123, ஜான் கேம்பல் 45, ப்ரெண்டன் கிங் 63, அலிக் அதனாஷ் 45, ஜஸ்டின் க்ரிவ்ஸ் 43 ரன்களை குவித்தனர்.

நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக்கப் டுபி 4, அஜஸ் பட்டேல் 3, மைக்கேல் ரே 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அடுத்ததாக 155 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து 306/2 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. நியூஸிலாந்துக்கு கேப்டன் டாம் லாதம் மீண்டும் சதமடித்து 101, டேவோன் கான்வே 100, கேன் வில்லியம்சன் 40*, ரச்சின் ரவீந்திரா 46* ரன்களை குவித்தர்கள்.

- Advertisement -

அரிதான சாதனை:

அந்த வகையில் இப்போட்டியில் 2 இன்னிங்ஸிலும் நியூசிலாந்தின் துவக்க வீரர்கள் டாம் லாதம் 137, 101 டேவோன் கான்வே 227, 100 என 4 சதங்கள் அடித்துள்ளார்கள். ஒரு டெஸ்ட் போட்டியில் இப்படி ஒரு அணியின் 2 துவக்க வீரர்களும் 2 இன்னிங்ஸிலும் சதமடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த அரிதான நிகழ்வு கடந்த 149 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தப் போட்டியிலும் நடந்ததில்லை.

இதையும் படிங்க: 82 ரன்ஸ்..11 நாளில் பஸ்பாலை ஓடவிட்ட ஆஸி 15வது வருடமாக மாஸ் வெற்றி.. இங்கிலாந்து அவமானத் தோல்வி

அதனால் ஒரு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சதங்களை அடித்த முதல் ஓப்பனிங் ஜோடி என்ற உலக சாதனையை லாதம் – கான்வே படைத்துள்ளார்கள். இறுதியில் 462 என்ற இமாலய இலக்கைத் துரத்தும் வெஸ்ட் இண்டீஸ் 4வது நாள் முடிவில் 43/0 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் பிரண்டன் கிங் 37, ஜான் கேம்பல் 2 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

Advertisement