250 – 250 விக்கெட்ஸ்.. அர்ப்பணிப்புடன் விளையாடிய அஸ்வின்.. முரளிதரனுக்கு நிகராக.. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை

R Ashwin
- Advertisement -

ராஜ்கோட் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. அதனால் 12 வருடங்கள் கழித்து உங்களை தோற்கடிப்போம் என்று எச்சரித்த இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை காண்பித்துள்ளது.

முன்னதாக அப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஜாக் கிராவ்லி விக்கெட்டை எடுத்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்தார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற மகத்தான வரலாற்றையும் அவர் படைத்தார்.

- Advertisement -

அர்ப்பணிப்பான அஸ்வின்:
இருப்பினும் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட அவசரநிலை காரணமாக இரண்டாவது நாள் இரவோடு இரவாக அப்போட்டியிலிருந்து அஸ்வின் வெளியேறினார். அப்போது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்க்க சென்றதாலேயே அஸ்வின் நான் அப்போட்டியிலிருந்து விலகியதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் மேற்கொண்டு அஸ்வின் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன்னுடைய அம்மாவை சென்னைக்கு சென்று பார்த்து விட்டு கொஞ்சமும் நேரத்தை தாமதிக்காத அஸ்வின் உடனடியாக ராஜ்கோட் நகருக்கு திரும்பி வந்து 4வது நாள் ஆட்டத்தில் வலது கை பேட்ஸ்மேனான டாம் ஹார்ட்லியின் விக்கெட்டையும் எடுத்தார்.

- Advertisement -

அதையும் சேர்த்து இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் மொத்தம் 501* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அந்த 501 விக்கெட்டுகளில் அவர் 250 இடது கை பேட்ஸ்மேன்களையும் 251 வலது கை பேட்ஸ்மேன்களையும் அவுட்டாக்கியுள்ளார். இதன் வாயிலாக நூற்றாண்டு சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 இடது கை பேட்ஸ்மேன்கள் மற்றும் 250 வலது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலர் என்ற தனித்துவமான சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இல்லாததை இருக்குன்னு சொல்றாங்க.. இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பால் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் விமர்சனம்

இதற்கு முன் முரளிதரன் போன்ற மற்ற அனைத்து பவுலர்களும் இப்படி சமமாக 250 இடது 250 வலது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுத்ததில்லை. இது போக அஸ்வின் இதுவரை 98 போட்டிகளில் 501* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளுக்கு முன்பாகவே 500 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் அஸ்வின் படைத்துள்ளார். இதற்கு முன் இலங்கையின் முத்தையா முரளிதரன் மட்டுமே 100 போட்டிகளுக்குள் 500 விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement