இல்லாததை இருக்குன்னு சொல்றாங்க.. இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பால் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் விமர்சனம்

Ben Stokes DRS 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து அதை செய்து காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது போட்டியில் சுதாரித்த இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அதை விட 3வது போட்டியில் இங்கிலாந்தை தெறிக்க விட்ட இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் 557 ரன்களை துரத்தும் போது தங்களுடைய பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லிக்கு நடுவர்கள் கொடுக்கப்பட்ட தீர்ப்பு மீது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் அதிருப்தி:
குறிப்பாக பும்ரா வீசிய இன்ஸ்விங்கர் பந்தை தவறாக கணித்த ஜாக் கிராவ்லி அதை அடிக்க தவறினார். அப்போது பந்து அவருடைய காலில் பட்டதால் இந்திய அணியினர் உடனடியாக எல்பிடபுள்யூ முறையில் அவுட் கேட்டார்கள். அதற்கு களத்தில் இருந்த ஆம்பயர் ஜோயல் வில்சன் அவுட் கொடுத்தார்.

இருப்பினும் அதை ஏற்க மறுத்த ஜாக் கிராவ்லி ரிவியூ எடுத்தார். அதை சோதிக்கப்பட்ட போது பந்து லெக் ஸ்டம்ப் மீது லேசாக உரசிக்கொண்டு சென்றது தெரிந்தது. அதனால் விதிமுறைப்படி களத்தில் இருந்த நடுவர் கொடுத்த தீர்ப்பை மீண்டும் மூன்றாவது நடுவர் கொடுத்தார். சமீப காலங்களாகவே இப்படி பந்து ஸ்டம்ப் மீது உரசிக்கொண்டு செல்லும் போது “அம்பையர்ஸ் கால்” அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுவது நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வரிசையில் ஜாக் கிராவ்லி அவுட் பற்றி பென் ஸ்டோக்ஸ் விமர்சித்தது பின்வருமாறு. “ஜாக் கிராவ்லி டிஆர்எஸ் சரியாக இல்லை. ரிவ்யூ செய்கையில் பந்துகள் ஸ்டம்ப் மீது அடிக்காத போது எவ்வாறு அவுட் கொடுக்கப்பட்டது என்பதை சுற்றி சில தகவல்களை அவர் எங்களுக்கு கொடுத்தார். ரிப்ளையில் பந்து ஸ்டம்பை தாக்கவில்லை. ஆனால் அது ஸ்டம்பை தாக்கியதாக எண்கள் கூறியது”

இதையும் படிங்க: 11 செஞ்சுரி 11முறையுமே கிளிக்.. ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்திய – தனித்துவமான சாதனை

“இருப்பினும் அந்தப் படம் தவறாக இருந்தது. அதனால் அங்கு என்ன நடந்தது என்பது எனக்கு புரியவில்லை. போட்டியின் பொறுப்பாளர்கள் சில அம்சங்கள் தவறாக சென்றதாக கூறினார்கள்” என்று கூறினார். முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியிலும் குல்தீப் யாதவுக்கு எதிராக ஜாக் கிராவ்லிக்கு டிஆர்எஸ் முறையில் கொடுக்கப்பட்ட எல்பிடபுள்யூ தீர்ப்பு பற்றி பென் ஸ்டோக்ஸ் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement