பந்தை சேதப்படுத்தி ஏமாற்றி வென்ற அஸ்வின் அணி? புகாரளித்த மதுரையை எச்சரித்த டிஎன்பிஎல் நிர்வாகம்

R Ashwin 2
- Advertisement -

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் ஜூன் 14ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற போட்டியில் மதுரையை 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்புச் சாம்பியன் திண்டுக்கல் எளிதாக தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மதுரை 20 ஓவரில் போராடி 151 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் 12.3 ஓவரிலேயே இலக்கைத் தொட்டு எளிதாக வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தி ஏமாற்றி வென்றதாக மதுரை அணி புகார் செய்துள்ளது. இது பற்றி டிஎன்பிஎல் நிர்வாகத்திற்கு மதுரை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ கடிதத்தையும் எழுதியுள்ளது.

- Advertisement -

மதுரை புகார்:

அந்தக் கடிதத்தில் மதுரை அணியின் தலைமை நிர்வாக இயக்குனர் டி பூஜா குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “போட்டியின் போது எச்சரிக்கை கொடுக்கப்பட்டும் திண்டுக்கல் அணியினர் அப்பட்டமாக பந்தை சேதப்படுத்தினார்கள். அதனால் பந்தின் எடை மற்றும் தன்மை மாறியது. பேட்டின் மீது பந்து படும் போது உலோகத்தில் படுவது போன்ற சத்தம் வந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதை ஏற்றுக் கொண்டுள்ள டிஎன்பிஎல் நிர்வாகம் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்குமாறு மதுரை அணியிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அதை 24 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் மதுரை அணிக்கு டிஎன்பிஎல் நிர்வாகம் கெடு விதித்துள்ளது. ஒருவேளை இந்தப் புகார் பொய்யாக இருக்கும் பட்சத்தில் மதுரை அணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல்:

இது பற்றி டிஎன்பிஎல் நிர்வாகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் பிரசன்னா கண்ணன் கூறியது பின்வருமாறு. “அது சம்பந்தமாக நாங்கள் மதுரை அணியிடம் திடமான ஆதாரத்தைக் கேட்டுள்ளோம். ஒருவேளை ஏதேனும் ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டால் அதை நாங்கள் சுதந்திரமான கமிட்டியை அமைத்து விசாரணை செய்வோம்”

இதையும் படிங்க: கம்பீர் மற்றும் சுப்மன் கில்லுக்கு தலைவலியை ஏற்படுத்திய ஷர்துல் தாகூர்.. என்ன நடந்தது? – விவரம் இதோ

“அதே சமயம் போதுமான ஆதாரம் இல்லையெனில் குறிப்பிட்ட வீரர் மற்றும் அணி மீது பழி சுமத்திய மதுரை நிர்வாகம் மேலே நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் ஒரு போட்டியில் ஒவ்வொரு முறையும் சிக்ஸர் அடிக்கப்பட்ட பின், விக்கெட் விழுந்த பின், ஓவருக்கு இடையே பந்தின் தன்மைப் பற்றி சோதிக்கப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லையென்று நடுவர்கள் சொன்ன பின்பே போட்டி தொடர்ந்து நடைபெறும்” எனக் கூறினார்.

Advertisement