கம்பீர் மற்றும் சுப்மன் கில்லுக்கு தலைவலியை ஏற்படுத்திய ஷர்துல் தாகூர்.. என்ன நடந்தது? – விவரம் இதோ

Shardul Thakur
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக தற்போது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது இங்கிலாந்து சென்றடைந்து தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சில பயிற்சி அமர்வுகளில் விளையாடிய இந்திய அணியானது இந்திய ஏ அணிக்கு எதிராகவும் ஒரு பயிற்சியில் பங்கேற்று விளையாடியது.

சுப்மன் கில் மற்றும் கம்பீருக்கு தலைவலியை ஏற்படுத்திய ஷர்துல் தாகூர் :

அந்த போட்டியில் இந்திய முதன்மை அணியை விட இந்திய ஏ அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக முதன்மை இந்திய அணிக்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் அதிரடியாக 122 ரன்கள் அடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரில் நிதீஷ் ரெட்டியை விளையாட வைப்பதா? அல்லது சார்துல் தாகூரை விளையாட வைப்பதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் நிதீஷ் ரெட்டி கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடரின் போது தான் அறிமுகமானார். அப்படி அறிமுகமான அந்த தொடரிலேயே மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அசத்தலான சதத்தை பதிவு செய்திருந்தாலும் பந்துவீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியவர். அதுமட்டுமின்றி இதுவரை இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியு நான்கு அரை சதத்துடன் 331 ரன்களையும் குவித்துள்ளார். ஏற்கனவே கடந்த முறை இங்கிலாந்து மண்ணில் அவர் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு இம்முறை கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

அதேபோன்று இங்கு இங்கிலாந்து வந்து பயிற்சி மேற்கொண்டு வரும் வேளையிலும் நிதீஷ் ரெட்டி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ஷர்துல் தாகூர் பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி அசத்தலாக செயல்பட்டு வருகிறார். எனவே அனுபவ வீரரான ஷர்துல் தாகூருக்கு தான் நிதீஷ்குமார் ரெட்டியை தாண்டி வாய்ப்பு தர வேண்டும் என்று தற்போதே பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன.

இந்நிலையில் பயிற்சி போட்டியில் ஷர்துல் தாகூரின் இந்த அதிரடியான சதம் தற்போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் ஆரோக்கியமான தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த இங்கிலாந்து தொடரில் இளம் வீரரான நிதீஷ் ரெட்டி மீது நம்பிக்கை வைத்து விளையாட வைப்பதா? அல்லது ஏற்கனவே இந்திய அணிக்காக விளையாடி அனுபவம் உடைய ஒரு வீரரை விளையாட வைப்பதா? என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்தலான சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

இருந்தாலும் ஷர்துல் தாகூருக்கே இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி இடம் கிடைத்தால் 2023-ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement