இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்தலான சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

Yashasvi Jaiswal
- Advertisement -

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது படுதோல்வியை சந்தித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை முதன்முறையாக இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது.

இங்கிலாந்து தொடரில் ஜெய்ஸ்வால் நிகழ்த்த இருக்கும் சாதனை :

அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்காக ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னணி வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். இதன் காரணமாக அனுபவ வீரர்கள் இன்றி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இம்முறை இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதன் காரணமாக இந்த தொடரானது இந்திய அணிக்கு மிகவும் சவால் வாய்ந்த தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் பல்வேறு வீரர்கள் தங்களது தனிப்பட்ட சாதனைகளுக்காக காத்திருக்கின்றனர். அந்த வகையில் 23 வயதான இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த இங்கிலாந்து தொடரில் ஒரு முக்கிய சாதனைக்காக காத்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்த இருக்கும் சாதனை யாதெனில் : கடந்து 2023-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 4 சதம் மற்றும் 10 அரைசதம் என 1798 ரன்களை குவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் அவர் 202 ரன்களை அடிப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களை பூர்த்தி செய்வார். அதோடு மட்டுமின்றி இந்த இங்கிலாந்து தொடரில் அவர் 464 ரன்கள் குவித்தால் சர்வதேச போட்டிகளில் 3000 ரன்களையும் பூர்த்தி செய்வார்.

இதையும் படிங்க : சச்சினை விட விராட் கோலி தான் எனக்கு அந்த சிரமத்தை கொடுத்தவர் – ஜேம்ஸ் ஆண்டர்சன் கருத்து

ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதம் மற்றும் மூன்று அரைசதம் என 700 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் முதல் முறையாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் அங்கும் அசத்துவார் என்கிற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement