எங்களது அணிக்கு இவர் நல்ல பினிஷராக இருப்பார். தமிழக வீரரை எலாம் எடுத்தது பற்றி – பஞ்சாப் கிங்ஸ் அதிகாரி பேட்டி

KXIP

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பி.சி.சி.ஐ பிப்ரவரி 18 அன்று சென்னையில் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2021 பதிப்பிற்கான ஏலத்தை சிறப்பாக நடத்தி முடித்தது. அந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் பங்கெடுத்த போதிலும் பஞ்சாப் கிங்ஸ் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 53.2 கோடியை தன கைவசம் மீதமாக இருப்புத்தொகையாக வைத்து மற்ற ஏழு அணிகளை விட மிக பெரிய தொகை வித்யாசத்தில் கம்பீரமாக ஏலத்தில் வந்து அமர்ந்தது.

ஐபிஎல் 2021 ஏலத்தில் , பிக் பாஷ் லீக்கின் 2020-21 பதிப்பின் போது பெரிய அளவில் அனைவரையும் கவர்ந்த ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் மீதே பெரும் கண் இருந்தது. எதிர்பார்த்தது போல் மிக அதிக தொகை வைத்திருந்த காரணத்தில் பஞ்சாப் அணி அவரை சுலபமாக வாங்கியது. 14 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ரிச்சர்ட்சன் வாங்கப்பட்டார்.அவரைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் இந்தியாவின் உள்நாட்டு இளம்வீரரான நம் தமிழகத்தை சேர்ந்த ஷாருக் கான் மீது மிகுந்த ஆர்வம் காட்டியது. மேலும் அவரை 5.25 கோடிக்கு வாங்கி அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது.

ஷாருக்கான் அவ்வளவாக டி20 போட்டிகள் ஆடாத போதிலும் இவ்வளவு தொகை குடுத்து வாங்கிய காரணத்தை மொஹாலியை சொந்த ஊராக கொண்ட அணி உரிமையாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சதீஷ் மேனன் தனது காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஷாருக் கான் மிகவும் அற்புதமான திறமை வாய்ந்தவர்.இதைப் பற்றி மேலும் பேசிய மேனன், ஷாருக் தனது திறமையால் எங்களை ஈர்த்துள்ளார் என்பதை வெளிப்படுத்தினார்.

sharukh 1

இப்போது முடிவடைந்த சையத் முஷ்டாக் அலி டிராபி 2021 தொடரில் அற்புதமான பேட்டிங் பங்களிப்பை தனது அணிக்கு வழங்கினார். மேலும், நாங்கள் ஒரு மேட்ச் ஃபினிஷிங் செய்யக்கூடிய ஒரு திறமையான பேட்ஸ்மேனைத் தேடினோம். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) ஐபிஎல் 2020 ஆம் ஆண்டில் அந்த பணிக்கு க்ளென் மேக்ஸ்வெல்லை தேர்ந்தெடுத்தோம்.ஆனால் அது கைகொடக்கவில்லை.

- Advertisement -

sharukh

“ஷாருக் கான் மிகவும் அற்புதமான பேட்ஸ்மேன். உள்நாட்டு போட்டிகளில் தனது திறமையை நன்றாக வெளிப்படுத்தி வருகிறார். அது எங்களுக்கு அவர் மீதான மதிப்பை கூட்டியது. அவர் சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி டிராபியில் விளையாடிய விதம், அவர் திறமை வாய்ந்தவர் என்பதற்கான ஒரு முன்னோட்டம் தான். ஷாருக் டெத் ஓவர்களில அதிரடியாக ஆடி மேட்ச்சை முடிக்கும் திறனைக் கொண்டுள்ளார். நாங்கள் எதிர்பார்த்த பண்புகள் அனைத்தையும் அவர் கொண்டுள்ளார். அவர் நீண்ட காலமாக எங்கள் அணிக்காக இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அவரைப் பெற்றதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி, என்று கூறினார்.