ஐபிஎல் 2023 ஏலம் : மீண்டும் அதே சொதப்பலை செய்த பஞ்சாப், தக்க வைத்த – விடுவித்த வீரர்களின் பட்டியல் இதோ

MI vs PBKS
- Advertisement -

உலகில் நடைபெறும் அனைத்து டி20 தொடர்களை காட்டிலும் நம்பர் ஒன் டி20 பிரீமியர் லீக் தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலத்தில் இந்தியாவிலேயே நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ செய்து வருகிறது. முன்னதாக 8 அணிகளுடன் விளையாடப்பட்டு வந்த ஐபிஎல் தொடரில் இந்த வருடம் 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டதால் 2018க்குப்பின் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 2 நாட்கள் மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதன் காரணமாக 2023 சீசனுக்கான வீரர்கள் ஏலம் மினி அளவில் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சி நகரில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

Agarwal

- Advertisement -

அதற்கு முன்பாக இத்தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் விரும்பி தக்க வைத்த வீரர்களையும் தேவையின்றி கழற்றி விட்ட வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15க்குள் சமர்ப்பிக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டிருந்தது. அதற்கான கெடு நேற்றுடன் முடிந்ததை தொடர்ந்து அனைத்து அணிகளும் தங்களுடைய வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் 2008 முதல் இப்போது வரை முதல் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு போராடி வரும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை உரிமையாளராக கொண்ட பஞ்சாப் கிங்ஸ் இதுநாள் வரை கோப்பையை கோட்டை விட்டதற்கு என்னவெல்லாம் செய்ததோ அதை மீண்டும் செய்ய தொடங்கியுள்ளது.

பஞ்சாப் அணி:

ஏனெனில் காலம் காலமாக பெயரையும், ஜெர்சியையும் மாற்றுவதை வழக்கமாக வைத்துள்ள அந்த அணி வரலாற்றில் எந்த வீரரையும் நம்பாமல் ஒவ்வொரு வருடமும் கேப்டன்களை மாற்றுவது சர்வ சாதாரணமாகும். அதனால் அந்த அணி எப்பொதுமே செட்டிலாகி கோப்பையை வென்றதில்லை. அந்த வகையில் இந்த வருடம் கேப்டன்ஷிப் அனுப்பவமில்லை என்று தெரிந்தும் கர்நாடக இளம் வீரர் மயங் அகர்வால் மீது நம்பிக்கை வைத்து தங்களது புதிய கேப்டனாக பஞ்சாப் அறிவித்தது. ஆனால் இதற்கு முன் உள்ளூர் தொடரில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத அவர் பார்மை இழந்து காயத்தால் பெரிய அளவில் விளையாடவில்லை.

அதனால் வழக்கம் போல அவரை கேப்டன் பதிவியிலிருந்து மட்டும் நீக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் ஒரு படி மேலே சென்று மொத்தமாக இந்த வருடம் சுமாராக செயல்பட்ட ஓடின் ஸ்மித், சந்தீப் சர்மா ஆகியோரையும் பஞ்சாப் விடுவித்துள்ளது. முன்னதாக பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவையும் விடுவித்த அந்த அணி நிர்வாகம் ஷிகர் தவானை கேப்டனாக அறிவித்த நிலையில் ஜானி பேர்ஸ்டோ, பனுக்கா ராஜபக்சா, தமிழக வீரர் சாருக்கான், லியாம் லிவிங்ஸ்டன், காகிஸோ ரபாடா, அர்ஷிதீப் சிங் உள்ளிட்ட 16 வீரர்களை 62.80 கோடி செலவில் மீண்டும் தக்க வைத்துள்ளது.

- Advertisement -

இதனால் தற்போது அந்த அணியில் அதிகபட்சமாக 9 வீரர்களுக்கான இடம் காலியாக உள்ளது. அதில் அதிகபட்சமாக 3 வெளிநாட்டு வீரர்களை அந்த அணியால் வாங்க முடியும். அந்த 9 வீரர்களை வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் ஏலத்தில் வாங்குவதற்கு அந்த அணியிடம் 32.20 கோடி என்ற பெரிய ஏலத்தொகை கையிருப்பு உள்ளது. மொத்தத்தில் மீண்டும் புதிய கேப்டன் புதிய அணுகு முறையுடன் முதல் கோப்பையை வெல்ல களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல் இதோ:

pbks

ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான் , ஜானி பேர்ஸ்டோ, ப்ரப்சிம்ரான் சிங், பனுகா ராஜபக்சா, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டன், அதர்வா டைட், அர்ஷிதீப் சிங், பால்டேஜ் சிங், நாதன் எலிஸ், ககிஸோ ரபாடா, ராகுல் சஹர், ஹர்ப்ரீத் ப்ரார்

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 ஏலம் : ராகுல் – கம்பீர் தலைமையில் சரித்திரம் படைக்க தயாராகும் லக்னோ, தக்க வைத்த – கழற்றி விட்ட வீரர்களின் பட்டியல்

பஞ்சாப் கிங்ஸ் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியல்: மயங் அகர்வால், ஓடென் ஸ்மித், வைபவ் அரோரா, பென்னி ஹோவெல், இஷான் போரல், அன்ஸ் படேல் , பெராக் மன்கட், சந்தீப் சர்மா, ரிட்டிக் சாட்டர்ஜீ

Advertisement