ஐ.பி.எல் வரலாற்றில் மிகவும் மோசமான சாதனையை படைத்த பஞ்சாப் கிங்ஸ் அணி – சுவாரசிய தகவல் இதோ

pbks

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரானது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதிப்போட்டிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய 4 அணிகள் தேர்வாகியுள்ளன. அதில் முதலாவது குவாலிபயர் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன.

IPL
IPL Cup

அதனைத்தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அந்த எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி முதலாவது குவாலிபயர் போட்டியில் தோற்ற அணியுடன் விளையாடும். அதன் பின்னர் இறுதிப் போட்டி நடைபெறும் இந்தியாவில் துவங்கிய இந்த ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த வேளையில் வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடரின் இரண்டாவது பாகம் சிறப்பாக நடைபெற்று முடிய உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்ற கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 6 வெற்றிகளை மட்டுமே பெற்று 6-வது இடம் பிடித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இதன் மூலம் பஞ்சாப் அணி ஐபிஎல் வரலாற்றில் மோசமான ஒரு சாதனையை படைத்துள்ளது.

- Advertisement -

pbks 1

அந்த சாதனை யாதெனில் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடர்ந்து பிளேஆப் வாய்ப்பை இழந்த அணியாக டெல்லி அணி இருந்தது. டெல்லி அணி 2013ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக முதல் சுற்றுடன் வெளியேறியது. அந்த மோசமான சாதனையை தற்போது பஞ்சாப் அணி முறியடித்துள்ளது. இரண்டாயிரத்தி 2015ஆம் ஆண்டு முதல் தற்போது 2021ஆம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகளாக பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது.

இதையும் படிங்க : தோனி இந்த தவறை மட்டும் பண்ணா இன்னைக்கும் தோக்க வேண்டியது தான் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

- Advertisement -

2008 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ரன்னர் அப்பாக இருந்த பஞ்சாப் அணி கடந்த 7 ஆண்டுகளாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் தவித்து வருகிறது. தற்போதைய பிளே ஆப் சுற்றில் இருக்கும் அணிகளில் பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மட்டும்தான் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement