சவாலுக்கு நாங்க தயார். முதல் போட்டிக்கு முன்னர் வாய் ஜெவடால் விட்ட புஜாரா – இதெல்லாம் தேவைதானா?

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை என்கிற காரணத்தினால் இம்முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்க இந்திய அணி காத்திருக்கிறது.

INDvsRSA

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாரா தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்திருந்த பேட்டியில் கூறியதாவது : இந்திய அணியின் நிர்வாகம் வீரர்களாகிய எங்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறது என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும்.

எனவே தற்போது நாங்கள் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற தயாராகி வருகிறோம். ஏற்கனவே நாம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சாதித்து விட்டோம். அதே திறனுடன் இந்தத் தொடரில் நாம் வெற்றி பெறுவோம். எந்த சூழ்நிலையிலும், எந்த ஒரு நாட்டிலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்றும் புஜாரா கூறியுள்ளார்.

IND

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இம்முறை நமக்கு தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கோப்பையை கைப்பற்ற அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் இம்முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற போதிய அவகாசம் இருக்கிறது. நன்றாக பயிற்சி எடுத்து இந்த தொடரை சிறப்பாக அணுக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : பயிற்சியாளராக வரும்படி அழைப்பு விடுத்த அகமதாபாத் அணி. தட்டி கழித்த ரவி சாஸ்திரி – நடந்தது என்ன?

அவர் கூறியதெல்லாம் முற்றிலும் சரியான ஒன்றுதான். ஆனால் 33 வயதான புஜாரா கடைசியாக விளையாடிய 40 இன்னிங்ஸ்களில் சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி கடந்த பல தொடர்களாகவே மோசமான பார்ம் காரணமாக பேட்டிங் செய்ய திணறி வரும் வேளையில் புஜாரா இப்படி அறிக்கை விடுவது சரிதானா? என்று எண்ணத் தோன்றுகிறது. புஜாராவின் இந்த பேட்டி குறித்த உங்களது கருத்து என்ன?

Advertisement