பயிற்சியாளராக வரும்படி அழைப்பு விடுத்த அகமதாபாத் அணி. தட்டி கழித்த ரவி சாஸ்திரி – நடந்தது என்ன?

Shastri
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட ரவிசாஸ்திரி அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் தனது பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்படுவார் என்று தெரிகிறது. பயிற்சியாளர் பதவியில் இருந்து வெளியேறியதும் ரவி சாஸ்திரி என்ன செய்யப்போகிறார் என்று அனைவரும் காத்திருந்த வேளையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அவரை வைத்து ஒரு விளம்பரத்தையும் வெளியிட்டிருந்தது.

Shastri-1

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 15-வது ஐபிஎல் சீசனுக்காக புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் அணி அவரை தலைமை பயிற்சியாளராக செயல்படும்படி அணுகியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. மேலும் அவரோடு சேர்ந்து பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருணும், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோரும் செயல்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ரவிசாஸ்திரி தனது அடுத்த கட்ட பணி குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் : நான் நீண்ட நாட்களாக பபுள் வளையத்தில் இருந்து இப்போதுதான் வெளியே வந்துள்ளேன். இனி வரும் நாட்களை நான் சுதந்திரமாக கழிக்க உள்ளேன். வெளியுலக காற்றை சுவாசிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

shastri

மேலும் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக செயல்படும்படி எந்த அணியுடனும் நான் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. இது முற்றிலும் பொய்யான தகவல். தொடர்ந்து நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். அதுதான் எனக்கு பிடித்தமான பணி என்று தெரிவித்து வதந்திகள் குறித்த செய்திகளுக்கு எல்லாம் தற்போது ரவி சாஸ்திரி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : நிர்வாகத்திடம் இருந்து புஜாராவுக்கு கொடுக்கப்பட்ட மெசேஜ். இது வார்னிங் தான் – பிரவீன் ஆம்ரே பேட்டி

இதன் மூலம் அவர் மீண்டும் வர்ணனையாளராக தான் செயல்படப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவர் வர்ணனையாளராக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அவர் வர்ணனையாளராகவும், போட்டி தொகுப்பாளராகவும் செயல்படுவார் என்று கூறப்படுகிறது. ஒரு வர்ணனையாளராக அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருப்பது முற்றிலும் உண்மையே.

Advertisement