நிர்வாகத்திடம் இருந்து புஜாராவுக்கு கொடுக்கப்பட்ட மெசேஜ். இது வார்னிங் தான் – பிரவீன் ஆம்ரே பேட்டி

Pujara
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் அனுபவ வீரர் புஜாரா கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதுவரை 92 போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 6589 ரன்களை குவித்துள்ளார். ராகுல் டிராவிட்டின் ஓய்வுக்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்த புஜாரா தனது கரியரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஆனாலும் தற்போது அவர் சற்று கடினமான சூழல் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் பில்லராக இருந்த இவர் தற்போது 40 இன்னிங்ஸ்களாக சதம் இன்றி தவித்து வருகிறார்.

pujara 1

- Advertisement -

அதுமட்டுமின்றி முன்பை விட தற்போது அவர் குறைந்த ரன்களிலேயே அடிக்கடி ஆட்டம் இழந்து தடுமாறி வருகிறார். இந்த தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு இடம் கிடைக்காது என்று பலரும் பேசிய வேளையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்றும் இல்லையெனில் அவரது இடம் பறிபோகும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் டெஸ்ட் அணியில் புஜாராவின் இடம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரவீன் ஆம்ரே கூறுகையில் : நிச்சயம் புஜாராவிற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் இருந்து மெசேஜ்கள் வந்து இருக்கும். அவர் இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நிறைய ரன்களை அவர் குவித்துள்ளார். அதோடு கடினமான சூழலில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

pujara 1

அதுமட்டுமின்றி இந்திய அணி எப்போதெல்லாம் இக்கட்டான சூழலில் இருந்து இருக்கிறதோ அப்போதெல்லாம் ரன் குவித்து இந்திய அணியை காப்பாற்றியிருக்கிறார். மேலும் பல டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகவும் அவர் திகழ்ந்துள்ளார். இதனாலேயே தற்போது அவருக்கு மீண்டும் அணியில் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரிலும் புஜாரா சொதப்பும் பட்சத்தில் அவர் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் மிகப்பெரிய சாதனையில் இணைய காத்திருக்கும் – விராட் கோலி

இது அவருக்கு கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பாக கூட இருக்கலாம். ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சூர்யகுமார் யாதவ் போன்றோர் காத்திருக்கின்றனர். இது புஜாராவுக்கு கொடுக்கப்பட்ட கடைசி வார்னிங்-காக கூட இருக்கலாம் என பிரவீன் ஆம்ரே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement