தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் மிகப்பெரிய சாதனையில் இணைய காத்திருக்கும் – விராட் கோலி

Kohli
Advertisement

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் விளையாடி வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் போது சதம் விளாசிய விராட் கோலி அதன் பிறகு இதுவரை இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார். அண்மையில் டி20 கேப்டன் பதவியில் இருந்த விலகிய விராட் கோலியை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் பி.சி.சி.ஐ நீக்கியது. ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அவர் கேப்டனாக நீடிக்கிறார்.

kohli century

எப்போதுமே சதம் அடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்த கோலி இப்போது கடைசியாக விளையாடிய 21 இன்னிங்ஸ்ஸில் ஒரு சதம் கூட அடிக்காமல் இருப்பது மிகப்பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நிச்சயம் அவர் மீண்டும் வருவார் என்று அனைவரும் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதன் மூலம் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்த காத்திருக்கிறார். அதன்படி விராட் கோலி இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7801 ரன்களை குவித்துள்ளார். அதில் 27 சதங்களும், 27 அரை சதங்களும் அடங்கும்.

kohli 1

அவர் மேலும் 199 ரன்களை இந்த தொடரில் அடிக்கும் பட்சத்தில் 8000 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்த 6-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனை படைப்பார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், வி.வி.எஸ் லட்சுமணன், சேவாக் ஆகியோர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களை கடந்துள்ளனர். இந்த தொடரில் விராட் கோலி 199 ரன்களை குவிக்கும் பட்சத்தில் அவர் இந்தப் பட்டியலில் 6-வது வீரராக இணைவார்.

இதையும் படிங்க : இஷாந்த் சர்மாவோட டைம்லாம் முடிஞ்சிடுச்சி. அவருக்கு பதிலா இவரை சேருங்க – எம்.எஸ்.கே பிரசாத் வெளிப்படை

அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருந்துவரும் விராட் கோலி இந்த தொடரில் ஒரு சதம் விளாசும் பட்சத்தில் ஸ்டீவ் ஸ்மித், ஆலன் பார்டர், கிரீம் ஸ்மித் ஆகியோரையும் பின்னுக்குத்தள்ளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement